சொந்த ஊர் மக்கள் கேவலமா? எங்கிருந்து வந்தது இந்த பந்தா!

Report Print Kalam Kalam in புலம்பெயர்
சொந்த ஊர் மக்கள் கேவலமா? எங்கிருந்து வந்தது இந்த பந்தா!

இலங்கையில் போரில் ஈழத்தமிழர்கள் தங்களை உயிர்களையும், உடமைகளையும் இழந்தனர். அதில் சிலர் தங்களது தப்பித்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்றனர். அவர்களை தொடர்ந்து பல தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றனர். அங்கு சென்று ஓரளவு வசதி வந்தபின் சிலர் தங்களது பூர்வீகத்தை உணராமல் ஆடம்பரத்தை காட்ட முயலுகின்றனர்.

வெளிநாட்டில் இருந்துகொண்டு சொந்த நாட்டிற்கு சுற்றுலா செல்லும் இவர்கள், தங்களை அங்குள்ள மக்கள் உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக வீணாக செய்யும் சில வேலைகளை பற்றி 'பளார்' என முகத்தில் அறைந்தார் போல் கூறியுள்ளார் ஈழத்து கலைஞர் பாஸ்கி மன்மதன்.

இவர் ஒவ்வொரு வாரமும் தொடராக வெளியிட்டு வரும் 'செல்பி அக்கம்-பக்கம்' என்ற குறும்படத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் சொந்தங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதை விட வெட்டி செலவுகளுக்கு அதை விட பலமடங்கு செலவு செய்ய தயாராக இருக்கின்றனர்.

அகதிகளாக வந்த நாம் வசதிகள் வந்ததும் இல்லாதவர்களை ஏளனம் செய்வது சரிதானா என்பதை உணர வேண்டும்.

உங்களது படைப்புகளுக்கும் லங்காசிறியின் இலவச ஊடக அனுசரணை வழங்க வேண்டும் என்று விரும்புபவர்கள் pr@lankasri.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.

மேலும் புலம்பெயர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments