புற்றுநோயை கண்டுபிடிக்கும் இறால்கள்! ஆச்சரியமளிக்கும் உண்மை

Report Print Givitharan Givitharan in நோய்

இறால் இனங்களிலேயே மிகவும் அழகான தோற்றம் கொண்டதாக மான்டீஸ் (Mantis) எனப்படும் இனம் கருதப்படுகின்றது.

இவ் இன இறால்களுக்கு மற்றுமொரு சிறப்பியல்பு இருப்பதனை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது உயிரினங்களில் ஏற்படக்கூடிய புற்றுநோயை கண்டறியும் ஆற்றல் அவற்றுக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதில் விஷேட அம்சம் என்னவென்றால் புற்றுநோய் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும் முன்னரே இந்த இறால்களால் அதனைக் கண்டறிய முடியும்.

மேலும் புற்றுநோய் கலங்களை தமது கண்களினாலேயே கண்டுபிடிக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தற்போது குறித்த வகை இறால்களின் கண்களைப் போல் செயல்படக்கூடிய கமெராக்களை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இக் கமெரா உருவாக்கப்பட்டால் புற்றுநோயை இலகுவாகவும், விரைவாகவும் கண்டறிய முடியும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments