வியர்வையை துடைக்காமல் விட்டால் இந்த ஆபத்து நிச்சயம்!

Report Print Printha in நோய்
324Shares
324Shares
lankasrimarket.com

கோடைக்காலத்தில் அதிகமாக வியர்க்கும் போது, அந்த வியர்வையை துடைக்காமல் உடலில் அப்படியே காய வைத்து விட்டால், அதனால் ஒருசில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

வியர்வையை துடைக்காமல் விட்டால் ஏற்படும் பிரச்சனை என்ன?
  • வியர்வை அப்படியே உடலில் காயும் போது, ஒருவித அசௌகரியத்தை மற்றும் அரிப்பை சந்திக்கக்கூடும். ஏனெனில் வியர்வையானது அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்களை ஒன்று சேர்த்து, அரிப்பை உண்டாக்குகிறது.
  • வியர்வை உடலில் காயும் போது, அது அரிப்பை ஏற்படுத்தி, அது நீடிக்கும் போது, பயங்கரமான தடிப்புக்களை உடலின் மடிப்புகள் உள்ள இடத்தில் ஏற்படுத்துகிறது.
  • உடம்பில் அதிகமாக வியர்வை வெளியேறும் போது, அது உடுத்திய ஆடையில் காய்ந்து, அன்றைய நாள் உடல் முழுவதும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
  • வியர்வை அதிகம் வெளியேறி, அது அப்படியே உடலில் காயும் போது, சருமத்தில் ஒருவித பிசுபிசுப்புத்தன்மை மற்றும் வியர்க்குருவை ஏற்படுத்துகிறது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments