பெண்களுக்குள் சுரக்கும் ஆண்களின் ஹார்மோன்: என்ன நிகழும் தெரியுமா?

Report Print Printha in நோய்
1441Shares
1441Shares
ibctamil.com

பெண்களின் கருப்பை, ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் எனும் இரு ஹார்மோன்களில், டெஸ்டோஸ்டிரோன் குறைவாகவும், ஈஸ்ட்ரோஜென் அதிகமான அளவிலும் சுரக்கிறது.

அதுவே பெண்களுக்கு, ஆண்களுக்கு சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன் அதிகரித்து விட்டால், பெண்களின் உடம்பில் என்ன நிகழும் தெரியுமா?

பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரித்தால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
  • டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் பெண் உடலில், அதிகமாக சுரந்தால், அவர்களின் முகம், கன்னம், தாடை, மார்பு, முதுகு மற்றும் கால்கள் போன்ற உறுப்புகளில் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
  • ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு பெண் உடலில் அதிகரிக்கும் போது, முகத்தில், பருக்களின் தொல்லைகள் அடிக்கடி ஏற்படும்.
  • உடல் பருமன் திடீரென்று அதிகரித்து, சர்க்கரை அல்லது உப்பு போன்ற சுவைகள் உள்ள உணவுகளின் மீது நாட்டம் அதிகமாகும்.
  • Polycystic Ovary Syndrome எனும் கோளாறுகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாகுதல் போன்ற காரணத்தினால், பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.
  • அதிக முடி உதிர்வினால், தலைமுடியின் அடர்த்தி குறைந்து, பெண்களின் கருப்பையில் புதிதாக சதை வளர்ச்சி அடைந்து, பெண்ணுறுப்பில் கட்டி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments