உங்க நாக்கின் நிறம் என்ன? இந்த நிற நாக்கு ஆபத்தாம்

Report Print Printha in நோய்
642Shares
642Shares
lankasrimarket.com

உடலின் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதை நம் உடலுறுப்புகளே சில அறிகுறிகளை வெளிப்படுத்தி காட்டி கொடுத்துவிடும்.

அந்த வகையில் நம் நாக்கில் உள்ள நிறத்தினை வைத்து நம் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னவென்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.

அதனால் தான் உடல்நலக் குறைவினை சரிசெய்ய மருத்துவர்களிடம் செல்லும் போது அவர்கள் முதலில் நாக்கை நீட்ட சொல்கின்றனர்.

சிவப்பு நிறமுள்ள நாக்கு

நம்முடைய நாக்கு சிகப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.

மஞ்சள் நிறமுள்ள நாக்கு

நம்முடைய நாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது வயிறு அல்லது கல்லீரல் தொடர்பான நோய் உள்ளதை குறிக்கிறது.

பிங்க் நிறமுள்ள நாக்கு

பிங்க் நிறத்தில் நாக்கு இருந்தால், அது நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது என்பதை குறிக்கிறது.

இளம் சிவப்பு நிறமுள்ள நாக்கு

இளம் சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால், அது இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய் உள்ளதை குறிக்கிறது.

வெளீர் வெள்ளை நிறமுள்ள நாக்கு

உங்களின் நாக்கு வெளீர் வெள்ளை நிறத்தில் இருந்தால், அது உங்கள் உடலில் நீர் வற்றி உள்ளது என்பதையும், நுண்ணிய கிருமிகளின் தொற்றுக் காய்ச்சல் இருப்பதையும் குறிக்கிறது.

காபி நிறம் நிறமுள்ள நாக்கு

நாக்கின் நிறம் காபி நிறத்தில் இருந்தால், அது நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது.

சிமெண்ட நிறமுள்ள நாக்கு

உங்க நாக்கு சிமெண்ட் நிறத்தில் இருந்தால், அது செரிமானம் மற்றும் மூலநோய் உங்களுக்கு உள்ளது என்பதை குறிக்கிறது.

நீலம் நிறமுள்ள நாக்கு

நாக்கின் நிறம் நீலமாக இருந்தால், அவர்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்