வாயில் புண் 10 நாட்களுக்கு மேல் உள்ளதா? இந்த நோயாக இருக்கலாம்

Report Print Printha in நோய்
1509Shares
1509Shares
lankasrimarket.com

வாயில் புண் ஏற்படுவது வாய் புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.

அதுவும் வாயில் ஏற்படும் புண்கள் ஆறாமல் 10 நாட்களுக்கு மேல் இருந்தால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது.

அதோடு வாயில் இருந்து ரத்தக்கசிவு, வாயின் உள்பக்கத்தில் வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள், நாக்கின் அடியில் சிறுகட்டிகள், வாயின் மேற்புறத்தில் சிறு புண்கள், வீக்கமான கன்னங்கள் மற்றும் ஈறு வீக்கங்கள் போன்றவை வாய் புற்றுநோயின் அறிகுறியாகும்.

எனவே இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறிகள் தென்பட்டாலும் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

வாயை சுத்தமாக்குவது எப்படி?
  • தினமும் 2 கப் க்ரீன் டீ குடிக்க வேண்டு. இதனால் புத்துணர்ச்சியுடன் கூடிய சுவாசம் உண்டாகுவதுடன், வாய் சுத்தமாகும்.
  • பாலாடைக் கட்டியை தினமும் அளவோடு சாப்பிட்டு வரலாம். இதனால் பற்களின் உறுதி மேம்படும்.
  • கேரட்டை தினமும் கடித்து சாப்பிட்டு வந்தால் வாயின் மேற்புறம் சுத்தமாகி, பற்களில் உள்ள அழுக்குகள் நீங்கும்.

  • புதினா இலைகளை வாயில் போட்டு மென்று வந்தால், வாயில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்பட்டு வாய் சுத்தமாகும்.

  • தினமும் பால் குடித்து வந்தால் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு தேவையான பலம் கிடைக்கும்.
குறிப்பு

ஈறுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். எனவே பற்களை பாதுகாக்க தினமும் இரண்டு முறை பற்கள் துலக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்