டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறிகள் இவைதான்

Report Print Printha in நோய்

ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும் இன்சுலின் சரியாக சுரக்காமல் போவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இந்த டைப் 2 நீரிழிவு நோய் குறித்து ஆய்வு செய்ததில் 7 முக்கியமான அறிகுறிகளை சுட்டிக்காட்டியுள்ளனர். அப்படி அந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

டைப் 2 நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகள்?
  • எப்போதும் தாகமான உணர்வை உணரக்கூடும்.
  • இரவு நேரங்களில் அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்.
  • எப்போதும் மிகுந்த சோர்வை உணர்வது.
  • உடல் எடை குறையும், குறிப்பாக தசையின் அளவு குறையும்.
  • பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படும்.
  • உடலில் ஏற்படும் காயங்கள் குணமடைய காலத்தாமதமாகும்.
  • கண் பார்வை மிகவும் மங்கலாக தெரியும்.
டைப் 2 நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகள்?

டைப் 2 நீரிழிவு நோயினால் இதயப் பாதிப்பு, ரத்தக் குழாய்களில் அடைப்பு, கண்கள் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிப்படையும்.

குறிப்பு

மேல் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் குறிப்பாக சாப்பிட்ட பின் அதிகமாக ஏற்படுமாம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்