உங்க பற்கள் இப்படி உள்ளதா? உணவுக்குழாய் புற்றுநோய் வரலாம்

Report Print Printha in நோய்

மனித உடல் உறுப்புகளில் மிக எளிதாக பாக்டீரிய தொற்றிற்கு உள்ளாகக் கூடிய உறுப்புகளில் பற்கள் முதன்மையானதாக உள்ளது.

அதுவும் பற்கள் மற்றும் ஈறுகளை தாக்கக் கூடிய பாக்டீரியாக்களினால் உணவுக்குழாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என்று மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகின்றது.

இது குறித்த ஆய்வில், பற்கள் சுத்தமின்மையால் தோன்றக் கூடிய புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஆரம்ப காலத்தில் எவ்வித அறிகுறிகளும் தெரியாது.

இவ்வகை புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 15-25% நோயாளிகளுக்கு 5 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழும் உத்திரவாதம் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுவும் பற்களின் வழியாக பரவும் உணவுக்குழாய் புற்றுநோய் இளைஞர்களை விட முதியவர்களை உடனடியாக தாக்கவல்லது.

எனவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் தவறாமல் இருவேளையும் பற்களை துலக்கி சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

பல் ஈறுகளில் பாக்டீரியத் தொற்று ஏற்படுவது ஏன்?

ஒவ்வொரு முறையும் சாப்பிட்டதும் வாயை கொப்பளிக்காமல் இருந்தால், அந்த உணவுகளின் துணுக்குகள் பற்களின் இடையில் படிந்து பாக்டீரியாத் தொற்றுகளை உருவாக்குகிறது.

முத்தம் இடுவதால் பாக்டீரிய தொற்றுக்கள் பரவும். எனவே ஒவ்வொரு முறையும் முத்தமிட்ட பின்பும் பற்கள் மற்றும் உதடுகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்