சிந்திய ரத்தத்தில் HIV கிருமி உயிருடன் இருக்குமா?

Report Print Thuyavan in நோய்

HIV எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் மிகவும் கொடிய நோய் ஆகும்.

இந்த வைரஸ் தாக்கும்போது, இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்புத் திறன் (Immunity) குறைபாடு ஏற்பட்டு, அந்த குறைபாட்டின் காரணமாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமை சரிவர தொழிற்படாமல், ஏனைய தொற்றுநோய்களுக்கு ஆட்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகரிக்கிறது.

இலகுவாக வேறு உயிர்கொல்லி நோய்களின் தாக்கத்துக்கு உட்பட நேர்வதனால் இறப்பும் ஏற்படக்கூடும் என்பது நமக்கு தெரிந்த ஒன்று.

தட்டவெப்பம், நீரின் அளவு, ஈரப்பசை என பலவற்றை பொறுத்து உடலுக்கு வெளியில் HIV வைரஸ் வாழும்.

பொதுவாக ரத்தத்தில் அல்லது வேறு உடல்நீரில் இவை காய்ந்து விட்டால் HIV கிருமி அதிக நாள் உயிருடன் இருக்காது, காய்ந்துள்ள ரத்தக்கரையில் எச்ஐவி உயிருடன் இருக்காது, இதனால் தொற்றும் ஏற்படாது.

எது ஆபத்தை உண்டாக்கும் என்று ஆராய்ந்ததில், ஊசிக்குழாயினுள் ரத்தம் பல நேரம் ஈரப்பதமாகவே இருக்கும். மேலும் அது உறைவதற்கு அதிக நேரம் ஆகும்.

எனவே அதில் கிருமி உயிருடன் இருக்க வாய்ப்பு உண்டு. எனவே இந்த ரத்தத்தில் எச்ஐவி. இருந்து அந்த ஊசியை பயன்படுத்துபவர்களுக்கு பரவும் ஆபத்து உண்டு. வெளியில் சிந்தப்படும் ரத்தத்தை விட ஊசியில் கிருமியுடன் கூடிய ரத்தம் ஆபத்தானது என அறியப்படுகிறது.

முடிதிருத்தும் சலூன் கடையில் ஒருவருக்கு HIV தொற்று வரும் வாய்ப்பு மிக மிகக்குறைவு. ஆனால் அதேசமயம் பயன்படுத்தப்படும் பிளேடுகள் புதியதாக இருப்பதை உறுதிசெய்து கொள்வது அவசியம்.

இது போன்ற கிருமி நம் உடலுக்கு வெளியே மிகக்குறைந்த நேரம் தான் உயிருடன் இருக்கும். ரத்தத்தின் ஈரப்பதம் காய்ந்தவுடன் வைரசும் அழியும்.

தோலில் உள்ள காயங்கள் மூலம் ஒருவரின் ரத்த நாளங்களுக்குள் செல்ல முடிந்தால் தான் HIV தொற்றும் வாய்ப்பு உண்டு.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers