9 மணிநேரம் தூங்காதீர்கள்: இந்த நோய் கட்டாயம் வருமாம்

Report Print Printha in நோய்

நம்முடைய உடல் மற்றும் மூளைக்கு கொடுக்கும் ஓய்வு தான் உறக்கம். அத்தகைய உறக்கம் சரியாக இருந்து விட்டால் எவ்வித ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படாது.

ஆனால் அதுவே குறைவான நேரம் அல்லது அதிக நேரம் உறங்குவதற்கு எடுத்துக் கொண்டால் பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகளை சந்திக்கக் கூடும்.

அதிக நேரம் உறங்குவதால் ஏற்படும் நோய்?

அதிக நேரம் உறங்குவதால் டிமென்ஷியா எனும் நோய் ஏற்படும். அதிலும் மூன்றில் ஒரு பகுதி வயதானவர்களுக்கு அல்சீமர் மற்றும் டிமென்ஷியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

இது குறித்து 1948-ல் தொடங்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக நேரம் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கார்வாஸ்குலர் இருதய நோய் வருவதற்கான அபாயம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஒன்பது மணிநேரம் தூங்குபவர்களுக்கு அல்சீமர் நோய் வருவதற்கான வாய்ப்பு 10 வருடத்தில் இரட்டிப்பாக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நீண்ட நேரம் தூங்குவதால், நோய்களின் பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி, மூளையின் செயல்பாடு மற்றும் சிந்திக்கும் திறன் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்