தைராய்டு பிரச்சனைக்கான அறிகுறிகள்

Report Print Jayapradha in நோய்

பெரும்பாலும் ஆண்களை விட பெண்கள் தான் தைராய்டு பிரச்சனையால் அதிகம் கஷ்டப்படுவார்கள். தைராய்டில் ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு, தைராய்டிட்டிஸ் என்ற வகைகள் உள்ளன.

இரத்தத்தில் திடீர் உயர் ரத்த அழுத்தம், உடல் வளர்சியினால் நரம்புத்தளர்ச்சி, உடலில் அதிக வியர்வை வெளியேறுதல், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகபடியான இரத்த கசிவு, குடலின் இயக்கம் அதிகரித்தல், கைகளில் நடுக்கம் ஆகியவையும் தைராய்ட் அறிகுறிகளாகும்.

நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் மிக முக்கியமான அறிகுறிகள்.

உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிக்கும்.

தைராய்டுக்கான சிகிச்சைகள்
  • உணவில் அயோடைஸ்டு உப்பை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் தைராய்டு சுரப்பி சரியாக வேலைசெய்யவேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும்.
  • இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவைகளில் செலினியம் என்ற ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
  • தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் மனக்கவலை, மன அழுத்தமும் ஆகும்.தினமும் உடற்பயிற்சி செய்வதின் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.
  • உடலில் சிலருக்கு தைராய்டு சுரப்பியில் தேவையான அளவு ஹார்மோன்கள் சுரக்காமல் மிகவும் குறைவாகவே சுரக்கும், இவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்