அடிக்கடி ஏப்பம் வருகிறதா? இதுதான் காரணமாம்..

Report Print Jayapradha in நோய்

அனைவருக்கும் ஏற்படும் ஏப்பம், நமது உடலில் உள்ள வாயுக்கள் வாய் வழியாக வெளியேறும் நிகழ்வாகும்

ஒருசிலருக்கு இந்த ஏப்பம் அடிக்கடி ஏற்படுவதால், அது அவர்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறிவிடும்.

ஆனால் அடிக்கடி நமக்கு ஏப்பம் வருவதற்கு உடல் ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளது.

அடிக்கடி ஏப்பம் வருவதற்கு காரணம் என்ன?
  • கொழுப்புக்கள் நிறைந்த எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் குளிர்பானங்களை அதிகமாக குடிப்பது மற்றும் மோசமான டயட்டை பின்பற்றுவது இது போன்ற பல காரணங்களினால் ஏப்பம் ஏற்படுகிறது.
  • இரவு நேரத்தில் ப்ராக்கோலி, காலிஃப்ளவர், பீன்ஸ், முளைக்கட்டிய பயிர்கள் இது போன்ற வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவதாலும் ஏப்பம் வருவதற்கு காரணமாக உள்ளது.
ஏப்பத்தினால் ஏற்படும் பிர்ச்சனைகள் என்ன?
  • ஒருவருக்கு அதிகப்படியான ஏப்பம் இருந்தால், அவர்களுக்கு வயிற்றில் புண் உள்ளது என்று அர்த்தமாகும். இதனால் அவர்களுக்கு கடுமையான வயிற்று வலியும் ஏற்படும்.
  • நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பிரச்சனைகள் இருந்தால், அவர்களுக்கு அடிக்கடி ஏபம் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இதற்கு நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்ட வேண்டும்.
  • ஒருவர் அளவுக்கு அதிகமாக மன இறுக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், அவர்களுக்கு ஏப்பம் அடிக்கடி ஏற்படும்.
  • அஜீரண கோளாறுகள் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் காரணமாக ஒருவருக்கு அடிக்கடி ஏப்பம் வரும் பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்