RNA ஆனது வலிகளையும், அரிப்புக்களையும் தோற்றுவிக்கலாம்

Report Print Givitharan Givitharan in நோய்

miR-30c-5p எனப்படும் சிறு RNA ஆனது மனிதர் மற்றும் எலிகளில் நரம்பு வலிகளை ஏற்படுத்தலாம் எனத் தெரியவருகிறது.

இன்னொருவகை miR-711 எனப்படும் சிறு RNA அரிப்பை ஏற்படுத்தும் புரதத்துடன் சேர்ந்து அரிப்புக்களைத் தோற்றுவிக்கின்றது.

இவ் விளைவுகள் நரம்புத் தொழிற்பாட்டில் இச் சிறு பாரப்பரியத் திரவியம் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதைக் காட்டுகின்றது.

நரம்பு வலிகளைப் பொறுத்தவரையில் miR-30c-5p ஆனது TGF-beta எனப்படும் புரதத்தின் உற்பத்தியைக் குறைக்கின்றது. இப் புரதமே வலிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றது.

T-cells எனப்படும் புற்றுநோய்க்குரிய நிணநீர்க் கலங்கள் miR-711 இனைச் சுரக்கின்றது. இது கொறித்தண்ணிகளுக்கு வழங்கப்பட்டவேளை அவை கீறல்களைத் தோற்றுவித்திருந்தன. இக் குறித்த RNA ஆனது TRPA1 புரதத் தொழிற்பாட்டை பாதிக்கச் செய்கின்றது.

இம் முடிவுகள் அரிப்பு எவ்வாறு ஏற்படுகின்றது என்பது தொடர்பான மேலதிக தகவல்கனைத் தருவதாயுள்ளது.

மேலும் ஒரு தடைசெய்யும் பெ்ரைட் மூலக்கூறொன்றை வழங்கிய போது அரி்ப்பு குறைவாக இனங்கானப்பட்டிருந்தது. இப் பெப்ரைட் மூலக்கூறு அரிப்பு நோயாளிகளில் தகுந்த பலனைத் தரக்கூடடும் என நம்பப்படுகிறது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers