அதிக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நுளம்புகள்: நோய் பீதியின் உச்சத்தில் மக்கள்

Report Print Givitharan Givitharan in நோய்

மாசசூசெட்ஸ் ஆனது அமெரிக்காவின் வடபகுதியிலுள்ள ஒரு மாநிலம் ஆகும்.

இங்கு நிலவும் வழமைக்கு மாறான கடும் மழை காரணமாக நுளம்புகளின் குடித்தொகை அதிகரித்துள்ளதுடன், அவற்றின் மீதான வைரஸ் தொற்றுக்களும் அதிகரித்துள்ளன.

நைல் வைரஸ் என்றழைக்கப்படும் இவ் வைரஸினால் ஏற்படக்கூடிய பாதிப்பு இந்த வாரம் குறைவான மட்டத்திலிருந்து, நடுத்தர பாதிப்பு மட்டத்திற்கு உயர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

இத்தருணம் கிட்டத்தட்ட 162 நுளம்பு சமுதாயங்கள் நடுத்தர பாதிப்பு மட்டத்தில் காணப்படுவதாகவும், இதுவரையில் மனிதரில் எந்தவொரு தாக்கமும் இனங்காணப்பட்டிருக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்