ஆபத்தான நோய்களில் ஒன்றான பார்க்கின்சன் குறைபாடு: யாருக்கு வரும் தெரியுமா?

Report Print Jayapradha in நோய்

பார்க்கின்சன் குறைபாடு என்பது உடல் இயக்கத்தைப் பாதிக்கக் கூடிய ஒரு நரம்பு சார்ந்த சிதைவுக் குறைபாடு. இந்தக் குறைபாடு மூளையில் டோபமைன் என்ற வேதிப்பொருள் குறைவதால் ஏற்படுகிறது.

மேலும் பார்க்கின்சன் குறைபாடு ஏன் வருகின்றது அதற்கான முக்கிய காரணம் மற்றும் அறிகுறிகளைப் பற்றி பார்ப்போம்.

பார்க்கின்சன் குறைபாடு முக்கிய காரணங்கள்
 • சில மரபணு மாற்றங்களால் பார்க்கின்சன் குறைபாடு வருகிற ஆபத்து அதிகரிக்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
 • நச்சுப் பொருள்களை உட்கொள்வதால் டோபமைனை உற்பத்தி செய்யும் நரம்பு செல்கள் பாதிக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கிறார்கள்.
 • அறுபது வயதுக்கு மேலானவர்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படலாம். ஆனால் அறுபது வயதுக்கு முன்பாகவும் இந்தக் குறைபாடு வருகிற வாய்ப்பு உண்டு.
 • பெண்களுடன் ஒப்பிடும் போது ஆண்களுக்கு இந்தக் குறைபாடு வருவதற்கான சாத்தியங்கள் சற்றே அதிகம்.
 • ஒருவருடைய முதல் நிலை உறவினர் பார்க்கின்சன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கும் பார்க்கின்சன் குறைபாடு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
 • மூளையில் தீவிரமான அதிர்ச்சியும் காயமும் ஏற்படும்போது பார்க்கின்சன் குறைபாடு உண்டாகலாம்.
அறிகுறிகள்
 • இந்தக் குறைபாட்டின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க சம்பந்தப்பட்ட நபருடைய உடலில் நடுக்கமும் அதிகரிக்கும், அவருடைய தினசரிச் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
 • வயதாகும் போது அல்லது கையில் அடிபடும் போது சரியாக எழுத முடியாது, இது இயல்பு தான். ஆனால் நன்றாக எழுதுவபரின் கையெழுத்து இயல்பானதை விட சிறியதாக மாறும்.
 • குளிர் காலத்தின் போதும், மூக்கடைப் பின் போதும் சரியாக நுகர முடியாது. ஆனால் இந்நோயால் பாதிக்கப்பட்டவரால் வாசனையைக் கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்படுவர்.
 • தூக்கப்பிரச்சனை திடீரென தூக்கத்திலும் நடுக்கம் ஏற்பட்டுத் தூக்கத்தை பாதிக்கிறது. மேலும் உடலில் நீரின் அளவும், நார்ச் சத்தும் குறைவாக இருக்கும் போது மலச்சிக்கல் உருவாகும்,
 • நடப்பதிலும் எளிமையான செயல்களை செய்யவும் கடினப்படுவர். கை, கால் மற்றும் உடலில் ஒரு வித தொய்வு ஏற்படும்.
 • இயல்பாக பேசுவதை விடக் குரலானது மென்மையாக அல்லது கரகரப்பான குரலாக மாறிவிடும். மேலும் முகத்தில் எப்போதும் ஒரு வருத்தமான உணர்வு இருப்பது போலவே தோன்றும்.
 • பார்வைத் திறன் குறையும். உடலில் விறைப்பு தன்மை ஏற்படும். நேராக நிற்க முடியாமல், கூன் விழும்.
சிகிச்சைகள்
 • பெரும்பாலும் இந்த நோயைக் குணப்படுத்த முடிவதில்லை அறிகுறிகளைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் மருந்துகள் வழங்கப்படுகிறது.
 • பாதிக்கப்பட்டவர் சிறந்த நியூராலஜிஸ்ட், பிஸியோ தெரபிஸ்ட்டை அணுகுவது நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
 • தனிமையைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. உடலை மட்டுல்லாமல், மனதையும் மிகவும் பாதிக்கிறது,

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்