இது ஆண்களுக்கு மட்டும்! ஆண்களே கட்டாயம் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்

Report Print Jayapradha in நோய்

புற்றுநோய் பெரும்பாலும் பெண்களை மட்டும் தாக்கும் என்று சில ஆண்கள் எண்ணி கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் பெண்களை விட ஆண்களுக்கு தான் புற்றுநோய் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம்.

மேலும் புற்றுநோய்களில் பல வகை இருந்தாலும் ஆண்களை அதிகம் பாதிக்கும் கணைய புற்றுநோய் ஏற்பட என்னென்ன காரணங்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.

ஆண்களுக்கு கணைய புற்றுநோய் ஏற்பட காரணங்கள்
  • ஆண்களுக்கு கணைய புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று புகைபிடித்தல். மேலும் புகையிலை பயன்படுத்தும் ஆண்களுக்கு 30 சதவீதம் கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.
  • அதிக உடல் எடை இருக்கும் ஆண்களுக்கு கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 20 சதவீதம் அதிகரிக்கும். எனவே உடல் எடையை சரியாக பராமரித்து கொள்ளுங்கள்.
  • அதிக கதிர்வீச்சுகளை வெளியிடும் தொழிற்சாலைகள் மற்றும் நீண்ட நேரம் மடியில் லேப்டாப்பை வைத்து வேலை செய்வது போன்றவையலூம் கணைய புற்றுநோய் ஏற்படும்.
  • ஈரலில் இரும்புசத்து அதிகரிக்கும்போது ஹீமோக்ரோமடோசிஸ் என்னும் நோய் ஏற்படுகிறது. மேலும் இது கணைய புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
  • கணைய புற்றுநோய் வருவதற்கு வயதும் ஒரு முக்கிய கரணமாக உள்ளது. மேலும் இதனால் பாதிக்கப்படுபவர்க்ளின் வயது 45 வயதிற்கு மேலாக இருக்கும். ஆனால் இப்பொழுது இளைஞர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
  • சிறிய வயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்க்ளுக்கு கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். மேலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே கணைய புற்றுநோய் ஏற்படுபவதில்லை.
  • பரம்பரை வழியாகவும் கணைய புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. சில குடும்பங்களில் மரபு வழியாக இந்த நோய் ஏற்படக்கூடும்.
  • பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் வயிற்று புற்றுநோய் அல்லது கணைய புற்றுநோயை ஏற்படுத்தும். இந்த பாக்டீரிய தொற்றால் வயிறு புற்றுநோயை விட கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவாக தான் இருக்கும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers