புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க இது மட்டும் போதுமே!

Report Print Jayapradha in நோய்

உணவில் சுவையை அதிகரிக்க உதவும் மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை குணமாக்க உதவுகிறது.

அத்தகைய மஞ்சளும் கருப்பு மிளகையும் தினமும் உணவில் சேர்த்து வந்தால் எப்படி புற்றுநோய் வரமால் தடுக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையானவை
 • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
 • 1/4 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள்
 • 1/2 டீஸ்பூன் துருகிய இஞ்சி
 • 1 கப் பால்
 • 1 டேபிள்ஸ்பூன் தேன்

செய்முறை
 • முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் வைத்து விட்டு, பின் அதனுடன் தேனை தவிர மற்ற பொருட்களை சேர்த்து கொள்ளவும்.
 • பின்பு அவற்றை வடிகட்டி கொண்டு சிறிது நேரம் ஆறவிட்டு கடைசியாக தேன் சேர்த்து குடிக்கலாம்.இவ்வாறு செய்தால் உடலில்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல விதமான நோய்களில் இருந்து காக்கும்.
மஞ்சள் மற்றும் கருப்பு மிளகின் நன்மைகள்
 • மிளகில் உள்ள பப்பெரைன் மார்பக புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். அதுவே மிளகை மஞ்சளுடன் சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள புற்றுநோயின் எதிர்ப்பு குணம் அதிகமாகும்.
 • சைனஸ், மன அழுத்தம் மற்றும் தலைவலி ஆகிய பிரச்சனையை குணமாக்கி புற்றுநோயின் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
 • மேலும் இவை இரண்டும் இதய நோய்கள், முடக்கு வாதம், புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து காக்கிறது.
 • வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை தூளாக்கி கலக்கவும். அத்துடன் சிறிது இஞ்சியை நசுக்கி போட்டு தினமும் காலையில் குடித்து வந்தால் உடலின் எடையை சீராக வைக்கும்.
 • குடல் அல்லது வயிற்று பகுதியில் ஏதேனும் வீக்கம் அல்லது புண் ஏற்பட்டால் அவற்றை மிக விரைவிலேயே குணப்படுத்துக்கிறது.
 • முடக்கு வாதம், கீழ் வாதம், மூட்டு பிரச்சினை இவற்றிற்கு மஞ்சளும் மிளகும் சிறந்த மருந்தாகும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers