இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுதாதீங்க!

Report Print Jayapradha in நோய்

புற்றுநோய்களில் நிறைய வகைகள் உள்ளது. அதில் மிகவும் ஆபத்தானது வயிற்று புற்றுநோயே.

ஏனெனில் வயிற்று புற்றுநோய் இருந்தால், அதற்கான ஆரம்ப அறிகுறிகள் எதுவும் தெரியாது. அப்படியே அறிகுறிகள் தெரிந்தாலும், அது சாதாரணமாக தென்படும்.

வயிற்று புற்றுநோய்க்கு வயிற்று வலி மட்டுமே அறிகுறி அல்ல. அதற்கு மேல் நாம் சாதாரணமாக நினைக்கும் சில பிரச்சனைகளும் அதனுடைய அறிகுறிகள் தான்.

மலம் கழிக்கும்போது வலி

ஒருவருக்கு மலம் கழிக்கும் போது, இரத்தம் கலந்து வந்தாலோ அல்லது இரத்த வாந்தி எடுத்தாலோ, அது வயிறு புற்றுநோயிற்கான அறிகுறியாகும்.

பசியின்மை

பசியின்மை வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளுள் ஒன்றாகும். அதிலும் அதிகம் எதுவும் சாப்பிடாமலேயே வயிறு நிறைந்ததை போன்று உணர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

வயிற்று வலி

அடிக்கடி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில் அது வயிற்று புற்றுநோயிற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

உடல் எடை குறைதல்

தினமும் எந்த ஒரு டயட் இல்லாமல், உடல் எடை குறைந்தால், அதை சாதாரணமாக விடாதீர்கள். திடீர் உடல் எடை குறைவு, வயிற்று புற்றுநோயின் ஓர் அறிகுறியாகும்.

அடிக்கடி நெஞ்செரிச்சல்

அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், அது வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளாகும்.

மலச்சிக்கல்

வயிற்றில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி அடைந்தால், வயிற்று உப்புசம், வயிற்றுப் போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

குறிப்பு

மேற்கூறப்பட்டுள்ள அனைத்து அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers