அல்சர் உள்ளது என்பதை வெளிபடுத்தும் முக்கிய அறிகுறிகள் இதோ!

Report Print Jayapradha in நோய்

இன்றைய அவசர வாழ்க்கை சூழலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் எதிர்கொள்கிற பிரச்னை தான் அல்சர்.

உணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும் பாதிப்பே அல்சர் எனப்படும்.

குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும், நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இதன் அறிகுறிகளை என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

அடிவயிற்று வலி

அல்சர் இருந்தால், அடிவயிற்றில் கடுமையான வலியை சந்திக்க வேண்டியிருக்கும். இதற்கு காரணம் வயிற்றில் அதிகப்படியான அமிலம் இருப்பது தான். இந்த அமிலம் தான் புண்ணை ஏற்படுத்தி வலி மற்றும் அசௌகரியத்தை உருவாக்குகிறது.

குமட்டல்

வயிற்றில் உணவை செரிக்கும் அமிலத்தின் ஏற்றத்தாழ்வுகள் அடிக்கடி குமட்டலை உருவாக்கும். எனவே உங்களுக்கு அல்சர் உள்ளது என்பதை குமட்டலின் மூலமும் அறியலாம்.

திடீர் எடை குறைவு

உங்களின் எடை திடீரென்று குறைந்தால், அதற்கு முக்கியமான காரணங்களில் அல்சரும் ஒன்று. எனவே மருத்துவரை பரிசோதித்து முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

இரத்த வாந்தி

சில நேரங்களில் இரத்த வாந்தி கூட எடுக்க நேரிடும். குறிப்பாக உங்கள் வயிற்றில் புண் அதிகம் இருந்தால், இரத்தக் கசிவு ஏற்பட்டு அதனால் இரத்த வாந்தி எடுக்கக்கூடும்.

ஏப்பம்

உங்களுக்கு ஏப்பம் ஒருவித புளிப்புத்தன்மையுடன் வந்தால், அதற்கு முக்கிய காரணமாக இருப்பது அல்சர். எனவே மேற்கூறிய அறிகுறிகளுடன் ஏப்பமும் வந்தால் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

கருப்பு நிற மலம்

உங்கள் மலம் கருப்பு நிறத்தில் வெளிவந்தால், உங்களுக்கு அல்சர் முற்றிவிட்டது என்று அர்த்தம். எனவே இந்நிலையில் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகவும்.

வயிற்று உப்புசம்

சரியாக சாப்பிடாமலேயே, வயிறு நிறைந்துவிட்டது போல் உப்புசத்துடன் இருந்தால் அதுவும் அல்சருக்கான அறிகுறிகளுள் ஒன்று. எனவே வயிறு உப்புசமாக இருந்தால்சாதாரணமாக நினைக்காமல் மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்