சிறுநீரக புற்றுநோய் இருப்பதை காட்டிக் கொடுக்கும் முக்கிய அறிகுறிகள்

Report Print Jayapradha in நோய்

நம் உடலில் இருக்கும் கழிவுகளையும், நச்சுப்பொருட்களையும் வெளியேற்றி நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவது சிறுநீரகம்தான்

மேலும் சிறுநீரகத்தில் ஏற்படும் சிறுபாதிப்பும் ஒட்டுமொத்த உடல் இயக்கத்தையும் பாதிக்கும்.

இத்தகைய சிறுநீரக மண்டலத்தில் புற்றுநோய் வந்தால் என்னென்ன அறிகுறிகளை வெளிபடுத்தும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

சிறுநீரக புற்றுநோய் ஏற்பட காரணம்
 • சிறுநீரக செல்களில் உள்ள மரபணுக்களில் பிறழ்வு ஏற்படும்போது சிறுநீரக புற்றுநோய் ஏற்படும்.
 • புகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் மட்டும் இல்லாமல் சிறுநீரக நோயை தூண்டுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
 • மரபணுக்கள் வழியாக ஏற்படும் சில பிறப்பு குறைபாடுகளும் சிறுநீரக புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைகிறது.
 • டையூரிடிக்ஸ் எனப்படும் இரத்த அழுத்தத்திற்காக பயன்படுத்தப்படும் நீர் மாத்திரைகளும் சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
 • தனது வயதிற்கு ஏற்ற எடை இல்லாமல் அதிக எடையில் இருப்பவர்களுக்கு சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
 • அதிகளவு காட்மியம் உள்ள இடம் சில களைக்கொல்லிகள் மற்றும் கரிம கரைப்பான்கள் இருக்கும் இடத்தில் வேலை செய்வது சிறுநீரக புற்றுநோயை உண்டாக்கலாம்.
சிறுநீரக புற்றுநோய் முக்கிய அறிகுறிகள்
உடல் எடை குறைவு
 • சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உணவுகளை உடைப்பது மற்றும் உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்படும். இதன் காரணமாக உடல் எடையும் திடீரென்று குறைய ஆரம்பிக்கும்.
சிறுநீர் கழித்தலில் மாற்றம்
 • சிறுநீரில் இரத்தம் கலந்து வந்தாலோ அல்லது வழக்கத்தை விட சிறுநீர் அதிகமாகவோ, குறைவாகவோ கழிந்தாலும் சிறுநீரக புற்று நோயாக இருக்க வாய்ப்புள்ளது.
பசியின்மை
 • பசியின்மை என்பது பல நோய்களின் அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. இதனை சாதாரணமாக நினைக்காமல் உடனடியாக இந்த அறிகுறி தெரிந்தவுடன் மருத்துவரை அணுகி சோதனை செய்துகொள்வது நல்லது.

முதுகு வலி
 • முதுகு அல்லது பக்கவாட்டுப் பகுதியில் வலி அல்லது அழுத்தம் ஏற்பட்டால், அது சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
சோர்வு
 • நாள்பட்ட சோர்வு அல்லது களைப்பும், சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். எனவே நீங்கள் திடீரென்று காரணமேயின்றி, மிகுந்த சோர்வை உணர்ந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்