அப்பெண்டிக்ஸ் இருந்தால் என்ன அறிகுறிகள் தென்படும் ?

Report Print Kavitha in நோய்

பொதுவாக அப்பெண்டிக்ஸ் 15-25 வயதினருக்கு அதிகமாக உள்ளது.

இதற்கு பொதுவாக சீழ்பிடிப்பதால் வரும் நோய் மற்றும் கட்டிகள். சீல் பிடிப்பதற்கு காரணம் கிருமி தொற்று, உள் பகுதியில் மலம் அடைத்து கொள்வது, குடல் புழுக்களால் அடைப்பு போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை செய்து அப்பெண்டிக்சை அகற்றி விட்டால் பல பின்விளைவுகளை தடுக்கலாம் என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் இதற்கு பல்வேறு அறிகுறிகள் நமது உடலில் தென்படும். தற்போது அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

அடிவயிற்று வலி

குடல்வால் நோய் இருந்தால், முதலில் அடிவயிற்றில் வலியை உணரக்கூடும். அதிலும் இந்த வலியானது மிகவும் கடுமையாக, அடிவயிற்றின் வலது பக்கத்தில் இருக்கும்.

மேலும் இப்பிரச்சனை இருந்தால், அந்த வலி 6-24 மணிநேரத்திற்கு நீடித்திருக்கும்.

அடிவயிற்றில் வீக்கம்

அடிவயிற்று வலியுடன், உங்கள் அடிவயிறு வீங்கி காணப்படுமாயின், அதுவும் குடல்வால் நோய் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

வாந்தி

பாக்டீரியாக்களின் தாக்குதல் இருந்தால், அடிவயிற்றின் வலது பக்க வலியுடன், சில நேரங்களில் வாந்தியை எடுக்கக்கூடும்.

குமட்டல்

குமட்டல் பல்வேறு நோய்களுக்கு ஓர் பொதுவான அறிகுறியாகும் அத்துடன் வயிற்று வலியுடன் ஏற்படும்.

பசியின்மை

பசி ஏற்படமல் இருப்பது, உணவைக் கண்டாலும் சாப்பிட வேண்டுமென்று தோன்றுவதும் அது குடல்வால் நோய் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

குடலியக்க பிரச்சனை

குடல்வால் நோய் இருப்பவர்கள், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுவார்கள்.

வயிற்றுப் பிடிப்புகள்

வயிற்று வலியுடன், வயிற்றுப்பிடிப்புகள் அடிக்கடி ஏற்படுமாயின், நீங்கள் மருத்துவரை காண வேண்டிய நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...