பெண்களை மிரட்டும் மார்பகப் புற்றுநோய்: ஒர் விரிவான தகவல்

Report Print Kavitha in நோய்
568Shares

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய் தான்.

இது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

புற்றுநோயுடன் போராடுபவர்களை நினைவு கூறும் வகையில் பிங்க் நிற ரிப்பன் அணியப்படுகிறது.

தற்போது மார்பகப் புற்றுநோய் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன? இதனை எப்படி தடுக்கலாம்? என விரிவாக இங்கு பார்ப்போம்.

மார்பக புற்றுநோய் என்றால் என்ன?
Shutterstock

மார்பக புற்றுநோய் என்பது மார்பகத் திசுக்களில் ஆரம்பிக்கும் புற்றுநோய்களைக் குறிக்கும்.

இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின் அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும்.

எவ்வாறு பரவுகிறது?

மார்பக செல்லில் ஏற்பட்ட மாற்றம், நிணநீர் முடிச்சு வழியாக, உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவலாம்.

ஆரம்பத்தில், பால் சுரப்பிகளில் ஏற்படுகிறது. பின், இது மற்ற செல்களுக்கும் பரவுகிறது.

யாருக்கும் அதிகம் வர வாய்ப்புள்ளது?

மார்பக புற்றுநோயானது, ஆண்களை விட 100 மடங்கு அதிகமாக பெண்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன, அதேநேரத்தில் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இரண்டு பாலினங்களிலும் ஒரே மாதிரியே உள்ளன.

55 வயதைக் கடந்து மெனோபாஸ் ஏற்படும் பெண்களுக்கு, புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம். மற்றவர்களை விடவும், இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது என்பதால், கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.

30 அல்லது 35 வயதுக்குப் பிறகு, முதல் குழந்தையைப் பெறும் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடும்.

ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருமா?

பெண்களை போல் ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கு சாத்திய கூறுகள் உள்ளன.

இதனால் பெண்களுக்கு எவ்வளவு பாதிப்பையும் வலியையும் தருமோ அதே அளவு பாதிப்பு தான் ஆண்களுக்கும் உண்டாகும்.

மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுதான்.

‘ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோய் இருந்தால், அந்தக் குடும்பத்தில் ஓர் ஆணுக்கு மரபியல் காரணங்களால் வரும் என்று சொல்லப்படுகின்றது.

உடல் பருமன் உள்ள ஆண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு உண்டு.

உடல் கட்டமைப்பைப் பெற முயற்சிக்கும் இளைஞர்கள் ஸ்டீராய்டு ஊசிகள், மாத்திரைகள் என்று தவறான வழிகளில் மூலம் ஈஸ்ட்ரோஜன் என்ற பெண் ஹார்மோன் சுரப்பு அதிகமாகி இவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகரிக்கும். தவிர, கதிரியக்க சிகிச்சைகள், பிறவியிலேயே ஏற்பட்டிருக்கும் கோளாறுகளாலும் வரலாம்.

ஆபத்துக்காரணிகள்
pathology.jhu.edu
 • ஒரு பெண்ணின் தாய் அல்லது சகோதரிக்கு மார்பகப் புற்று இருந்தால் ஆபத்து அதிகம்.
 • புற்று அல்லாத மார்பகக் கட்டிகள் இருந்தால் பிற்காலத்தில் புற்றாக வளரும் வாய்ப்பு உள்ளது.
 • புற்றாக வளரும் ஆபத்து அதிகம்.
 • பெண்களுக்கு வயதாக ஆக மார்பகப் புற்று ஆபத்தும் அதிகமாகிறது.
 • புகை பிடிக்கும், கொழுப்புணவு அதிகமாக உண்ணும், மது அருந்தும் பெண்களுக்கு மார்பகப் புற்று ஆபத்து உள்ளது.
 • அடிக்கடி எக்ஸ்-கதிர், கணினி ஊடுகதிர் உடலில் பட்டால் மார்பகப் புற்று வரும் வாய்ப்பு அதிகம்.
 • அதிக எடை உள்ள பெண்களுக்கு மார்பகப் புற்று உருவாகும் ஆபத்து உள்ளது.
 • மாதவிடாய் சீக்கிரமே ஏற்பட்டவர்களுக்கும் வழக்கத்தைவிட காலங்கழித்து மாதவிடாய் நின்றவர்களுக்கும் மார்பகப் புற்று ஏற்படும் ஆபத்து அதிகம். அதிக காலகட்டத்திற்கு பெண் இயக்குநீர் உடலில் செயல்பட்டதன் விளைவே இதற்குக் காரணம்.
அறிகுறிகள்
 • முலையில் மாற்றம் - கொஞ்சம் உட்புறமாக இருக்கும்.
 • முலையில் ரத்தக் கசிவு.
 • மார்பில் கட்டி தென்படுதல்.
 • மார்ப்பைச் சுற்றி அல்லது அதன் அடிப்பகுதியில் கனத்துப் போதல்.ஸ்கின் டெக்ஸ்சரில் மாற்றம் மற்றும் துளைகள் பெரிதாகுதல்.
 • மார்பின் உருவம் மாறி, அளவு பெரிதாகுதல்.
 • மார்பில் குழி ஏற்படுதல்.
 • மார்பில் வீக்கம் மற்றும் சுருக்கம்.
 • தோல் செதில் செதிலாகவோ, சிவப்பு நிறத்திலோ, வீக்கமோ இருத்தல்.
மார்பக புற்றுநோய் ஏற்பட காரணங்கள்?
 • `மெனோபாஸ்', சரியான வயதில் வராமல், இயல்பைவிடத் தள்ளிப்போனாலும், மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம்.
 • 11 வயதுக்கு முன்பே பூப்படையும் பெண் குழந்தைகளுக்கு, `ஈஸ்ட்ரோஜென்' சுரப்பு அதிகமாக இருக்கும். அதனால், வருங்காலத்தில் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம். இந்தக் குழந்தைகளுக்கு மற்றவர்களை விடவும், இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது.
 • வாழ்நாள் முழுவதும், கர்ப்பம் அடையாத பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரக்கூடும்.
 • இரவுப் பணியில் அதிகம் வேலைசெய்யும் பெண்களுக்கு, `மெலோடினின்' ஹார்மோன் சுரப்பு குறையத்துவங்கும். இது சில வருடங்களை வரை தொடர்ந்தால், மார்பகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம்.
 • மாசு கலந்த காற்றை அதிகம் சுவாசிக்கும் பெண்களுக்கும், வாய்ப்பு அதிகம். குறிப்பாக, வாகன நெரிசல்களுக்கு மத்தியில் நீண்டகாலம் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரலாம்.
மார்பகப் புற்றுநோயை எப்படி கண்டுப் பிடிப்பது?

சில பெண்களுக்கு தொடக்கத்தில் கண்டறிய முடியும். ஆனால் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் இருப்பதில்லை. அதனால் ஸ்கிரீனிங் டெஸ்டுகள் மூலம் கண்டறியப் படுகிறது.

சுய பரிசோதனை மற்றும் மாமோகிராம், அல்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ ஸ்கேன், பயாப்ஸி ஆகியவற்றால் இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டுப் பிடிக்க முடியும்.

மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை நாம் எவ்வாறு குறைப்பது?
mountelizabeth

நடைப்பயிற்சி, மெதுவாக ஓடுதல், நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் இதர உடற்பயிற்சிகள் இந்த நோய் ஏற்படும் வாய்ப்பை 10-20% குறைக்கிறது.

மார்பகப் புற்று நோயிலிருந்து உங்களை காத்துக் கொள்ள வழிகள் என்ன?
 • கொழுப்பு சத்து மிகுந்த உணவை தவிர்க்க வேண்டும்.
 • உடல் பருமன், அதிக எடையை தவிர்க்க வேண்டும்.
 • மாதவிடாயை மாற்றக்கூடிய மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தாமல் இருத்தல்.
 • உங்கள் நெருங்கி உறவினர்கள் எவரேனும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
தானாகவே எப்படி மார்பக புற்றுநோய்யை பரிசோதனை செய்வது ?
 • மார்பக பரிசோதனையை நாம் கண்ணாடி முன்னால் நின்று செய்து பார்ப்பது நல்லது.
 • வலது மார்பகத்தைப் பரிசோதனை செய்யும்போது இடது கையையும், இடது மார்பகத்தைப் பரிசோதனை செய்து பார்க்கும்போது வலது கையையும் பயன்படுத்த வேண்டும்.
 • உடைகளைக் களைந்து கையின் மூன்று விரல்களில் லேசாக சோப்பு, தேங்காய் எண்ணெய், குளிப்பதற்குப் பயன்படுத்தும் ஜெல் ஆகியவற்றில் ஒன்றைத் தடவிக்கொள்ள வேண்டும்.
 • பின்னர் கைக்கு அடியிலிருந்து மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் நன்றாக மார்பகத்தை அழுத்திக் கட்டிகள் போல் ஏதேனும் தென்படுகிறதா என்று பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
 • மார்புக் காம்புகளில் இருந்து நீர் அல்லது ரத்தக் கசிவு ஏற்படுகிறதா என்று காம்புப் பகுதியைக் கசக்கிப் பார்க்க வேண்டும்.
நவீன சிகிச்சைகள்

ஆன்கோ பிளாஸ்டிக் சர்ஜரி

தொடக்க நிலை மார்பக புற்றுநோய்க்கு இந்த சர்ஜரி செய்யப்படும். கேன்சர் சர்ஜரி மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி இவை இரண்டும் சேர்ந்தது தான் இந்த ஆன்கோ பிளாஸ்டிக் சர்ஜரி. அறுவை சிகிச்சை செய்யப் பட்ட மார்பை இயற்கையான தோற்றத்திற்கு இதன் மூலம் கொண்டு வரலாம்.

ரேடியோ தெரபி

ரேடியேசன் மூலம் ட்யூமர் செல்லை நீக்க இது உதவுகிறது. இதில் 3 வார தொடர் அட்வான்ஸ்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது.

கீமோதெரபி

1 செ.மீ-க்கும் அதிகமான ட்யூமர் கட்டிகளைக் கொண்டவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சையளிக்கப் படுகிறது. கீமோதெரபியின் காம்பினேஷனாக ட்ரான்ஸ்ட்ஸமாப் எம்டான்சினி என்ற மருந்தும் கொடுக்கப் படுகிறது. ஆனால் புற்றுநோய் செல்களோடு சேர்த்து இதில் நார்மல் செல்களும் கொல்லப்படுகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
 • ஆண்டுதோறும், டாக்டர்களின் ஆலோசனைப்படி, உடல் நல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
 • ரத்த உறவுகளில் யாருக்கும் மார்பக புற்று நோய் இருந்தால், தொடர் பரிசோதனை அவசியம்.
 • குடும்பத்தில், பலருக்கு புற்றுநோய் இருந்தால், ஒட்டு மொத்த குடும்ப நபர்களும், டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும்.
 • கொழுப்பு சத்துள்ள உணவைத் தவிர்ப்பதோடு, உடல் பருமனையும் குறைக்க வேண்டும்.
 • காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மன அழுத்தத்தில் சிக்கி விடக் கூடாது.
 • தியானம், எளிய உடற்பயிற்சிகள் செய்வதால், பாதிப்பு வராமல் தப்ப முடியும்.
மார்பக புற்றுநோய்யை தடுக்கு உணவுமுறைகள்
 • அதிகாலை வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது மூலம் மார்பக புற்றுநோய்யை தடுக்கலாம்.
 • அதிகாலை வெறும் வயிற்றில், பாலில் பூண்டை வேகவைத்து பின்னர் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்றுநோய்யை தடுக்கலாம்.
 • மார்பக புற்றுநோய்க்கு பப்பாளிப் பழம் சிறந்த உணவாகும்
 • அகத்திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும்.
 • வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.
மார்பக கட்டிகளை எளிதில் கரைக்கும் எளிய வைத்தியம்
 • தொட்டா சிணுங்கி செடியின் ஏதேனும் ஒரு பாகத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதை ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, வடிக்கட்டி காலை மற்றும் மாலை வேளைகளில் குடித்து வந்தால், மார்பக கட்டி விரைவில் கரையும்.
 • கழற்சிக் காயில் உள்ள ஓடுகளை நீக்கி உள்ளிருக்கும் பருப்பை எடுத்து பொடி செய்து, அதில் ஒரு பங்கு எடுத்து மிளகு பொடியுடன் சேர்த்து கலந்து அதை தினமும் இரு வேளைகள் உணவுக்கு முன் அரை ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், மார்பக கட்டி விரைவில் கரையும்.
 • ஒரு பாத்திரத்தில் 5 பூண்டு பற்கள் தட்டி போட்டு, அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் ஆகிய இரண்டையும் சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தினமும் இருவேளைகள் குடித்து வந்தால் மார்பக கட்டிகள் கரைந்து, அதன் வலி மற்றும் வீக்கமும் குறையும்.
மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், செயற்கை மார்பகங்களை பொருத்திக்கொள்ளலாமா?
 • மார்பகம் நீக்கப்பட்ட இடத்தில் `செயற்கை மார்பகங்கள் பொறுத்தும்’ சிகிச்சைமுறை தற்போது வழக்கத்தில் இருக்கிறது. இதை, `பிரெஸ்ட் ரீகன்ஸ்ட்ரக்‌ஷன்' (Breast Reconstruction) என்கிறார்கள்.
 • பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் உதவியுடன் நோயாளியின் உடலிலுள்ள மற்ற பகுதி தசைகள் பெறப்பட்டு செயற்கை மார்பகங்கள் பொருத்தப்படுகின்றன.
 • புற்றுநோயாளிகள், அவர்களது சிகிச்சை காலத்துக்குப் பிறகும், தொடர் கண்காணிப்பின்போது கதிரியக்க சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம்.
 • அந்த வகையில், மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்குப் பிறகு, மார்பகத்தை இழந்த பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைதான் இது.
 • பொதுவாகப் புற்றுநோய் சிகிச்சைகள் எடுத்து அதிலிருந்து மீண்டு வருபவர்களில் பலர் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
 • அதிலும், மார்பகங்கள் நீக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களது உடல் சார்ந்த தாழ்வு மனப்பான்மை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்தகைய பாதிப்புகளிலிருந்து வெளிவர, இத்தகைய செயற்கை மார்பகங்கள் உதவுகின்றன.

புற்றுநோய் வந்தாலே இறப்புதான் என்று அச்சம் கொள்ளாமல் வித்தியாசமான அறிகுறி தோன்றியதும் மருத்துவரை அணுகுங்கள்.

மார்பகப் புற்றுநோய் வந்ததைவிட அதை சரிசெய்ய முயற்சி செய்வதைவிட, வரும்முன் காப்பதற்கு முயற்சி செய்வது நல்லது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மார்பக புற்றுநோயை விரட்டி அடிப்போம். மரணத்தை வெல்வோம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்