உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்!

Report Print Kavitha in நோய்
413Shares
#S

இன்று உலகம் முழுவது பேசப்படும் ஒரு நோயாக கொரோனா வைரஸ் மாறிவிட்டது.

இதனால் பல உயிரிழப்புக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவதானல் உலக வாழ் மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் சீனாவில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இதைபோன்று ஜப்பான்,தென்கொரியாவில், தாய்லாந்து , அமெரிக்கா, தைவான், ஆஸ்திரேலியா, பிரான்சிலும் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றது.

இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படமால் இருக்க இதற்கான தகுந்த முன்னேச்சரிக்கை எடுத்து கொள்வது அவசியமானது ஆகும்.

அந்தவகையில் தற்போது கொரோனா வைரஸ் எப்படி பரவிகின்றது? இதனை தடுக்க என்ன பண்ணலாம் என இங்கு பார்ப்போம்.

கொரோனா வைரஸ் என்றால் என்ன?

கொரோனா வைரஸ் என்பது வைரஸின் ஒரு பெரிய குடும்பமாகும்.

இது சாதாரண சளி முதல் சுவாச நோய்களான மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி மற்றும் தீவிரமான சுவாச நோய்க்குறி போன்ற கடுமையான நோய்கள் வரை நோயை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

கொரோனா என்ற பெயர் எப்படி வந்தது?
 • கொரோனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்றுகள் இருக்கும் நிலையில், இது 7 ஆவது வைரஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு 2019- nCoV (New Strain Of Coronavirus) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • இதில் இந்த வைரஸ் 2019 ஆம் கண்டறிந்ததற்காக 2019 என்ற ஆண்டையும், n என்பது புதிய என்பதையும், CoV என்பது கொரோனாவையும் குறிக்கிறது.
 • மேலும் இந்த வைரஸ் டிசம்பர் 31 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
எவ்வாறு பரவியுள்ளது?
 • இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
 • சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் மரபணுவை ஆராய்ந்தபோது அது சார்ஸ் நோயைப் போன்றே வௌவாலிடமிருந்து பரவியிருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
 • அதன் பிறகு நடைபெற்ற அடுத்தகட்ட ஆய்வுகளில் இந்த வைரஸ் தொற்று பாம்புகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் அறிகுறிகள்
 • மூக்கு ஒழுகல்
 • தொடர் இருமல்
 • தொண்டைப்புண்
 • களைப்பு
 • தலைவலி
 • மூச்சு விடுவதில் சிரமம்
 • காய்ச்சல்
கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது?
 • கொரோனா வைரஸ் காற்றின் மூலம் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்டவை. அதில், நோய்த்தொற்று உள்ளவருடன் நெருக்கமான தொடர்புகளான கைகளை குலுக்குதல், தொடுதல் அல்லது இதர தொடர்பு கொள்வதால் பரவும்.
 • வைரஸ் உள்ள இடம் அல்லது பொருளைத் தொடுவதால் பரவும். எனவே இந்த வைரஸ் தாக்கம் உங்கள் பகுதியில் இருப்பதாக தெரிந்தால், எந்த ஒரு பொருளைத் தொட்ட பின்பு கைகளை நீரால் கட்டாயம் கழுவ வேண்டும்.
 • சில சமயங்களில் இந்த வைரஸ் இருமல் அல்லது தும்மலினால் காற்றின் மூலமும் பரவும்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது எப்படி?
 • நோயாளிகளைக் காணச் சென்றால், கைகளைத் தவறாமல் கழுவவும்.
 • தும்மல் மற்றும் இருமலின் போது மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ளவும். மேலும் எப்போதும் மாஸ்க் அணிந்து கொள்ளவும்.
 • இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்து சாப்பிடவும்.
 • சுவாச பிரச்சனைகள் உள்ள யாருடனும் நெருக்கமாக தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.
மேலும் இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்