கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி? அறிவியல் பார்வையில் ஓர் அலசல்

Report Print Kavitha in நோய்
#S

இன்று பல நாடுகளை பயமுறுத்து நோயாக “கொரோனா வைரஸ்” உருவெடுத்துள்ளது.

சீனாவில் தோன்றி இலங்கை, இந்தியா, கனடா, பிரானஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் வரை பரவி அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியது இந்த கொரோனா வைரஸ்.

அந்தவகையில் இந்த வைரஸ் எப்படி பரவுகிறது? இந்த வைரஸ் நோய் தாக்கினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன அல்லது இந்த நோயின் அறிகுறிகள் என்ன? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஒரு அறிவியல் பார்வையில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸின் தோற்றம்?

(severe acute respiratory syndrome coronavirus/SARS-CoV) மற்றும் மெர்ஸ் (Middle East respiratory syndrome coronavirus (MERS-CoV) வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு வைரஸ் தான் இந்த புதிய கொரோனா வைரஸ்.

உலக சுகாதார மையம் இந்த வைரஸிற்கு கொரோனா வைரஸ்க்கு 2019-nCoV என்று பெயரிட்டுள்ளது.

கொரோனாவைரஸ் என பெயர் வர காரணம்?
 • கொரோனா வைரஸ் தொற்றுநோயானது, விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் சூனாடிக் வைரஸ் நோய் (zoonotic viral diseases) வகையைச் சேர்ந்தது.
 • ஒரு எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலமாக பார்க்கும்போது ஒரு கிரீடம் போல அல்லது சூரியனுடைய கொரோனா பகுதிபோல தோன்றுவதால் இந்த வகை வைரஸ்களுக்கு கொரோனா வைரஸ் எனும் பெயர் சூட்டப்பட்டது.
என்ன ஆபத்தை ஏற்படுத்தும்?
 • சார்ஸ் மற்றும் மெர்ஸ் வகை கொரோனா வைரஸ்கள் மனிதர்களின் உடலில் மிகவும் மோசமான மூச்சுத்திணறல் மற்றும் இதர பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
 • மனிதர்களைத் தாக்கி அவர்களின் உடலில் பல்கிப் பெருக அவசியமான பல மரபணு மாற்றங்களை இந்த வைரஸ் விலங்குகளின் உடலில் இருக்கும்போதே பெற்றுவிடுகிறது என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
 • அடிப்படையில், காற்று மூலமாக பரவும் தன்மைகொண்ட கொரோனா வைரஸ்கள், பாலூட்டிகள் மற்றும் பறவைகளை தாக்கும்போது அவற்றின் மூச்சுக்குழாயின் மேல் பகுதி மற்றும் குடல் பகுதிகளில் சென்றுவிடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எதன் மூலம் பரவியது?
 • கொரோனா வைரசின் மரபணு மீதான மேலதிக ஆய்வுகளில் இது பாம்புகளில் இருந்து வந்திருக்கும் என்று சுட்டிக்காட்டும் உறுதியான சில முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
 • வவ்வால்களை பாம்புகள் வேட்டையாடுவதால், வவ்வால்களில் இருந்த கொரோனா வைரஸ் முதலில் பாம்புக்கு தாவி பின்னர் பாம்புகளை சாப்பிட்ட மனிதர்களுக்கு பரவிவிட்டது என தற்போதைய உறுதியான தகவல் கூறுகின்றனர்.
முதலில் எப்படி பரவியது?
 • முதலில் பாதிக்கப்பட்டவர்கள் சீனாவின் ஊஹான் நகரிலுள்ள மீன் மார்கெட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் அங்கு மீன் வாங்கிய வாடிக்கையாளர்கள் பரவியது என தகவல் தெரிவிக்கின்றன.
 • முதன்முதலில் இந்த வைரஸ் வவ்வால்களில்தான் தோன்றியது என்றும், அதனைத் தொடர்ந்து ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் மற்றும் வாழக்கூடிய பாலூட்டிகள் மற்றும் ஒட்டகங்கள் ஆகியவற்றை தொற்றி இறுதியாக மனிதர்களுக்கு தொற்றியது என்றும் ஆய்வுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரசிடமிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்வது?
 • சளி, தொண்டை வலி, தலைவலி, ஜுரம், இருமல் உபாதைகளை ஏற்படுத்தும் கொரோனாவைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்ட ஒருவரின் தும்மல், இருமல் மற்றும் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றால் வைரஸ் பரவும்.
 • இதனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருப்பதும், கை கால்களை எப்போதும் சோப்பு போட்டு கழுவுவதும், கை கழுவாமல் கண், மூக்கு மற்றும் வாய் போன்ற பகுதிகளை தொடாமல் இருக்க வேண்டும். இதனால் கொரோனா வைரஸ் நமக்கு தொற்றாமல் நம்மை பாதுகாக்க முடியும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்