உயிரை குடிக்கும் காச நோய்! எப்படி விடுபடலாம்? ஓர் அலசல்

Report Print Kavitha in நோய்

காசநோய் என்பது நுரையீரலை பாதிக்ககூடிய பக்டீரியா கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோயாகும்.

இந்நோய் பொதுவாக டி.பி (TB) எனக் குறிப்பிடப்படுகிறது. TB என்பது Tubercle bacillus (டியூபர்க்கில் பாசிலசு)அல்லது TUBERCULOSIS (டியூபர்க்குலோசிசு) என்பதன் சுருக்கமாகும்.

முதன்மையான நோய்க் காரணி Mycobacterium tuberculosis என்னும் கோலுருவான (bacilli), ஒரு காற்று வாழ் பக்டீரியாவாகும்.

காசநோய் ஒரு அபாயகரமான நோயாகும். இதற்கு சரியான சிகிச்சையை சரியான நேரத்தில் கொடுக்காமல் இருந்தால், அது ஒரு தீவிரமான பிரச்சனையாக மாறி விடும்.

அந்தவகையில் தற்போது காசநோய் எப்படி பரவுகின்னறது? இதற்கு சிகிச்சை என்ன? என்ன உணவுகளை எடுத்து கொள்ளலாம் என இங்கு பார்ப்போம்.

காசநோய் எப்படி பரவுகிறது?

காசநோய் தாக்கப்பட்டவர் இருமும் போது வெறியேறும் சிறு சிறு சளி துளிகள் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு காற்று மூலம் காசநோய் பரவுகின்றது.

காசநோய் கிருமிகள் 10 முதல் 15 அடி தூரம் உளளவர்களுக்கு கூட மிக சாதாரணமாக பரவும்.

காசநோய் யாருக்கு வரும்?

சிகிச்சை பெற வரும் நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடும் மருத்துவத் துறையில் வேலை பார்க்கும் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கும் காசநோய் அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளது.

உடலில் எதிர்ப்பு சக்தி பாதிப்பு உடையவர்களையும் காசநோய் பாதிக்கும்.

எச்.ஐ.வி மற்றும் உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் செய்து கொண்டு அதற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களை காச நோய் உடனே பாதிக்கும்.

சிறுநீரகம் செயல் இழந்து சிகிச்சை பெறு பவர்களையும் இந்த நோய் கடுமையாக தாக்கும் திறன் படைத்தது.

காசநோயினால் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார்?
 • காசநோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்
 • எயிட்ஸ் நோய், சலரோகம், புற்று நோயுடையோர்.
 • புகைப்பிடிப்பவர்கள்.
 • போசாக்கு குறைபாடு உடையோர்.
 • சனநெருங்கிய இடங்களில் வாழ்பவர்கள்.
 • காற்றோட்டம், சூரியஒளி குறைந்த இடங்களில் வாழ்பவர்கள்.
 • மதுபானம், போதைப்பொருள் பாவிப்போர்.
காசநோய் அறிகுறிகள்
 • வாரத்துக்கு மேல் தொடர்ந்து இருமல், வறட்டு இருமல், சளி.
 • சிலசமயம் சளியில் ரத்தம் வருதல், காய்ச்சல் அல்லது காய்ச்சல் இல்லாமை.
 • இரவு நேரத்தில் குளிர், அத்துடன் வியர்வை வெளியேறுதல்
 • பசி குறைதல்
 • எடை குறைதல்
 • உடல் சோர்வு
ஒருவருக்கு காசநோய் ஏற்பட்டதை எப்படி அறியலாம்?

ஒருவருக்குக் காசநோய் உள்ளதா என்பதை அவருடைய அறிகுறிகளே தெரிவித்துவிடும். என்றாலும், நோயை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை, மேண்டோ பரிசோதனை, சளிப் பரிசோதனை, மார்பு எக்ஸ்-ரே, சிடி ஸ்கேன் போன்றவை உதவும்.

இவற்றில் சளிப் பரிசோதனை முக்கியமானது. சளியில் காசநோய்க் கிருமிகள் இருக்குமானால் அது காசநோயை 100 சதவீதம் உறுதி செய்யும்.

காச நோய் பரவாமல் தடுப்பது?

சந்தேகத்திற்குரிய நோய் அறிகுறிகள் உடைய ஒருவராயின் வைத்தியரிடமோ , அருகில் உள்ள மார்பு நோய் சிகிச்சை நிலையத்துக்கோ, சளிப்படல மாதிரி பரிசோதிக்கும் பரிசோதனை நிலையத்துக்கோ சென்று பரிசோதிக்கவும், பரிசோதிக்க தூண்டுதல் செய்யவும்.

இருமும்பொழுதும் தும்மும்பொழுதும் மூக்கையையும் வாயையும் கைக்குட்டையினாலோ சிறு துணியினாலோ மூடிக் கொள்ளவும்.

மதுபானம் போதை மருந்து போன்றவற்றைப் பாவிக்க வேண்டாம்.

நீரிழிவு, அஸ்துமா பேன்ற நீண்டகாலமாக இருக்கக் கூடிய நோய்களை கிரமமாக மருந்துகளை உட்கொள்வதன் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும்.

6 முதல் 9 மாதம் வரை மருந்து சாப்பிட்டாலே போதும். காசநோய் முற்றிலும் குணமாகி விடும்.

சிகிச்சை என்ன?

ரிஃபாம்பிசின், ஐசோநியசிட், எத்தாம்பூட்டால், பைரசினமைடு, ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி மருந்து ஆகியவை முதல்நிலை காசநோயைக் குணப்படுத்துகின்றன.

இந்தியாவில் 1993ல் உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன், ‘திருத்தப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ‘டாட்ஸ்’ (DOTS Directly observed treatment short course ) என்று அழைக்கப்படும் ‘கூட்டு மருந்துச் சிகிச்சை’இந்தச் சிகிச்சையை மொத்தம் 6 மாதங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், காசநோய் முற்றிலும் குணமாகிவிடும்.

காசநோய்க்கிருமிகளைக் கண்டறியும் முறைகள்
 • சளிப் பரிசோதனை
 • வளர்ப்பு ஊடகங்களில் சளியினை இட்டு காசநோய்க் கிருமிகளின் பெருக்கத்தினை அவதானித்தல்.
 • தோற் சோதனை (மாண்டு பரிசோதனை)
 • CXR நெஞ்சு எக்ஸ்கதிர்படம்
 • இரத்தப்பரிசோதனை
காச நோயாளிகள், எந்தமாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்?
 • காசநோய் உள்ளவர்கள் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழங்களான ஆரஞ்சு, மாம்பழம், பப்பாளி, கொய்யா, நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 • காசநோயை கட்டுப்படுத்த வேண்டுமானால், தினமும் பூண்டு பற்களை வாயில் போட்டு 2-3 நிமிடங்கள் மென்று விழுங்குங்கள்.
 • காசநோயில் இருந்து விரைவில் விடுபட வேண்டுமானால், பாதாம் பாலை குடிக்க வேண்டும். இது எளிதில் செரிமானமாவதோடு, ஏராளமான வைட்டமின்களையும் கொண்டது.
 • காசநோயாளிகள் காய்கறிகளான கேரட், தக்காளி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் ப்ரோக்கோலி போன்றவற்றை அன்றாட டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 • காசநோயாளிகள் தானியங்களையும் தங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பசி கட்டுப்படுத்தப்படுவதோடு, வேகமாக காசநோயில் இருந்து விடுபடவும் உதவும்.
 • காசநோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால், காபி மற்றும் டீ குடிப்பதைக் குறைத்து, க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.
 • வைட்டமின் டி நிறைந்த உணவுகளான கொழுப்பு நிறைந்த மீன்களான டுனா, கானாங்கெளுத்தி, சால்மன், சீஸ், முட்டையின் மஞ்சள் கரு, பால் பொருட்கள், காளான், ஆரஞ்சு ஜூஸ், சோயா பால் மற்றும் செரில்கள் போன்றவற்றை அடிக்கடி உட்கொள்ளுங்கள்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...