கொரோனா வைரஸ் பீதியால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் மக்கள்: தப்பிப்பதற்கான வழிகள்

Report Print Givitharan Givitharan in நோய்
#S

தற்போது உலக அளவில் அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தையாக கொரோனா வைரஸ் காணப்படுகின்றது.

இதனால் ஏற்படும் உயிரிழப்புக்களாலும் மற்றும் வேகமாக பரவுகின்றமையாலும் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து காணப்படுகின்றனர்.

எனவே கொரோனா வைரஸ் ஆனது தற்பேது மன ரீதியாகவும் மக்களை பாதித்துள்ளது.

இதனை தவிர்ப்பதற்காக உலக சுகாதார மையம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதன்படி கொரோனா தொடர்பில் கவலை கொள்ளச் செய்யும் தகவல்களை பார்த்தல், கேட்டல் மற்றும் வாசித்தலை தவிர்க்க வேண்டும்

உங்கள் திட்டங்களைத் தயாரிக்கவும், உங்களையும் அன்பானவர்களையும் பாதுகாக்க நடைமுறை நடவடிக்கைகளை எடுக்க முக்கியமாக தகவல்களைத் தேடுங்கள்.

ஒரு முறை அல்லது இரண்டு முறை ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் புதிய தகவல்களைத் தேடுங்கள். ஒரு வைரஸ் பரவல் பற்றிய செய்தி அறிக்கைகளின் திடீர் மற்றும் நிலையான தகவல்கள் எவரையும் கவலையடையச் செய்யலாம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்