கொரோனா தாக்கியவுடன் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன? எப்படி குணமாகும்.. மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு

Report Print Raju Raju in நோய்

கொரோனா வைரஸ் மனித உடலில் எப்படி செல்கிறது மற்றும் அதன் காரணமாக எப்படி மரணம் ஏற்படுகிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் பலவாறாக பரப்பபடுகிறது. ஆனால் உண்மையில் அச்சப்படும் அளவுக்கு கொரோனா எல்லோரையும் கொல்லாது. கொரோனா வைரஸ் உயிர்கொல்லி என்று சொன்னாலும் ஹெச்ஐவி போல் உயிர்கொல்லி நோய் அல்ல.

முக்கியமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இதயநோய், நீரழிவு நோய் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களையே மோசமாக பாதித்துள்ளது.

கொரோனா வைரஸை இயற்கையாகவே உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி எதிர்த்து போராடி விரட்டி விடும். அதற்கு மருத்துவர்களிடம் உரிய முறையில் சிகிச்சை பெற வேண்டும்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மனித உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ளது.

191 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி முதல் நாளில் காய்ச்சல் ஏற்படும். 3வது நாளில் இருமல், தொண்டை வறட்சி ஏற்படலாம். 80 சதவீத நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டன.

3 முதல் 4 நாட்களில் இந்த தொற்று நுரையீரலை தாக்கலாம். 4வது நாள் முதல் 9 வது நாள் வரை மூச்சுத்திணறல் தொடங்கலாம். 8வது நாள் முதல் 15ஆவது நாள் வரை நுரையீரலில் எரிச்சல் ஏற்பட்டு, மூச்சுத்திணறல் பிரச்சனையை கடுமையாக்கும் .

14 சதவீத நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

நோய் பாதிப்பு நுரையீரலில் இருந்து ரத்தத்துக்கு செல்லலாம். முதல் வார இறுதியில் ரத்தம் நஞ்சாகி உயிருக்கு ஆபத்தான நிலையை எற்படுத்தும். 5 சதவீத நோயாளிகளுக்கு இந்த அறிகுறி ஏறபட்டுள்ளது. இவர்களுக்கு தான் அவசர சிகிச்சை அவசியம். கொரோனா வைரஸை சரிசெய்ய 21 நாட்கள் ஆகும்.

அதற்குள் நோயாளிகள் இறக்கலாம் அல்லது குணமடைந்து செல்லலாம். சிகிச்சை பலன் அளித்தால் 18 முதல் 25 நாளில் குணடைந்த நோயாளிகள் சீனாவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மேலே கூறப்பட்ட அறிகுறிகள் தொடங்கிய உடன் 15 முதல் 22 நாட்களில் நோயாளிகள் இறந்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்