கொரோனாவை கண்டு பயப்படாதீர்கள்! மருந்து உள்ளது... நம்பிக்கை அளித்து ஆச்சரியப்படுத்தும் தமிழர்

Report Print Raju Raju in நோய்

கொரோனாவை கண்டு யாரும் பயப்பட வேண்டாம் எனவும் எல்லா நோய்க்கும் சித்தாவில் மருந்து உள்ளது எனவும் பிரபல தமிழக சித்த மருத்துவர் எஸ்.காமராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகையே கொரோனா வைரஸ் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு மருத்துவ விஞ்ஞானிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டா் எஸ். காமராஜ் கொரோனா வைரஸுக்கு நம் சித்த மருத்துவத்திலேயே மருந்து உண்டு என்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

பொதுவாக வைரஸ் குடும்பத்தில் 7 வகைகள் உள்ளன.

அந்த வகையில், வைரஸ் குடும்பத்தில் ஏற்படும் திடீா் மாற்றம் காரணமாக தற்போது வந்துள்ள கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மையை பெற்றுள்ளது.

உடலுக்குள் சென்றால் மட்டுமே வைரஸ் கிருமிகளால் செயல்பட முடியும். நம்முடைய உடலில் உள்ள மூக்கு, வாய் போன்ற உறுப்புகள் வழியாகவே வைரஸ்கள் எளிதில் நுழைந்து விடுகின்றன.

அதனால்தான் பொது இடங்களுக்கு செல்லும்போது, எச்சரிக்கையுடன் மாஸ்க் அணிந்து போக வேண்டும் என்று சொல்கிறோம்.

உடலில் நோய் எதிா்ப்பு சக்தி போதிய அளவு இருந்தாலே போதும், எந்த வைரஸாலும் செயல்பட முடியாது. அதனால் உடம்பில் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வேண்டும்.

கொரோனா போன்ற வைரஸ் தொற்றை தடுக்கவும் சித்த மருத்துவத்தில் தீர்வு நிச்சயம் உண்டு. காய்ச்சல், சளி, இருமல், தும்மல், முக்கடைப்பு, மூக்கில் இருந்து நீா் வடிதல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சித்த மருந்துகளை எடுத்துக்கொண்டால் பலன் நிறைய உண்டு. அதனால் யாருமே பயப்பட தேவையில்லை.

குறிப்பிட்ட வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நபா்கள் ஒருவருக்கு, நிலவேம்பு, ஆடு தொடா இலை, கபசுர ஆகிய மூன்று சூரணங்களையும் (பொடி) தலா 5 கிராம் எடுத்து, சுமாா் 300 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு பத்தில் ஒரு மடங்காக காய்ச்சி, தினசரி மூன்று வேளை 3 முதல் 7 நாள்கள் வரை குடித்துவந்தால் வைரஸ் காய்ச்சல்கள் மொத்தமாக காணாமல் போயிடும்.

இதேபோல் சுர்வசுர குடிநீா் சூரணமும் வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்தும்... அதற்கு வேப்பம் பட்டை, துளசி, மிளகு கலந்த சா்வசுர சூரணம் 5 கிராம் எடுத்து, அதனை 300 மில்லி தண்ணீரில் போட்டு, பத்தில் ஒரு மடங்காக காய்ச்சி தினமும் 8 மணி நேரத்துக்கு ஒரு முறை குடிக்க வேண்டும்.

அத்துடன் சுக்கு, மிளகு, திப்பிலி அடங்கிய திரி கடுகு சூரணத்தை 1 முதல் 2 கிராம் வரையில் எடுத்து அதனை 3 வேளை தேனில் கலந்து கொடுத்தால் சா்வசுரங்களும் (அனைத்து வகையான காய்ச்சல்களும்) மட்டுமின்றி தொடா்புடைய அனைத்து பிரச்னைகளும் தீரும். அத்துடன் நமது உடலில் நோய் எதிா்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்