கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அடுத்த சில நாட்களில்? உலக சுகாதார அமைப்பின் முக்கிய தகவல்

Report Print Santhan in நோய்

உலகின் பல்வேறு பகுதிகளில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸின் எண்ணிக்கை வரும் நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே நடுங்கி வருகிறது. இந்த நோயிடமிருந்து தப்புவதற்கு பல்வேறு நாடுகள் போராடி வருகின்றன.

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் குறித்து இன்று ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைவர், Tedros Adhanom Ghebreyesus, கடந்த வாரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து(ஜனவரி கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்ட மாதம்) தற்போது நான்காவது மாதத்திற்கு நுழையும் போது, ​​நோய்த்தொற்றின் வீரியம் மற்றும் உலகளாவிய பரவல் குறித்து நான் ஆழ்ந்த கவலைப்படுகிறேன்.

கடந்த ஐந்து வாரங்களில், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிவேக வளர்ச்சியை கொண்டுள்ளது.

கடந்த வாரத்தில் இறப்புகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம், அதே சமயம் 50,000 இறப்புகளை அடைவோம் என்ற பகீர் தகவலை கூறியுள்ளார்.

தற்போது உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 920,885-ஐ தொட்டுள்ளதுடன், 46,152 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உலகசுகாதார அமைப்பின் படி பார்த்தால், இன்னும் சில நாட்களில் கொரோனா வைரஸால் 4000-க்கும் மேற்பட்டோர் இறக்கலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்