ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உங்கள் வீட்டில் உள்ளனரா? கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான புதிய எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in நோய்

இன்னும் உலகின் பல நாடுகளை ஆட்டம் காணவைத்துக் கொண்டிருக்கின்றது கொரோனா வைரஸ்.

இதனால் பொதுவாக வயது முதிர்ந்தவர்களே அதிகமாக இறந்துள்ளனர்.

சிறார்கள் மற்றும் நடுத்தர வயதினர்களில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் வலிமை காரணமாக இறப்புக்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.

எனினும் கொரோனா வைரசினை பரப்புவதில் இவர்களுக்கும் பங்கு உண்டு.

இந்நிலையில் தற்போது ஆராய்ச்சியாளர் குழு ஒன்று வெளியிட்ட தகவல் ஆனது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது 5 வயதிலும் குறைந்த குழந்தைகள் கொரோனா வைரஸ்களை பரப்புவதில் உச்ச இடத்திலிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது இளைஞர்கள், நடுத்தர வயதினரை விடவும் 10 தொடக்கம் 100 மடங்குவரை அதிகமாக கொரோனா வைரசினை இவர்கள் பரப்பும் சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்காக்கோவில் கடந்த மார்ச் 23 ஆம் திகதி முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்பட்ட 145 நபர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்