கொரோனா தாக்கியவர்கள் அதிகளவில் முடியை இழக்கும் ஆபத்து

Report Print Givitharan Givitharan in நோய்
518Shares

தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டறியும் முயற்சி உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸினால் வேறு சில ஆரோக்கிய பிரச்சினைகளும் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுவருகின்றது.

இந்த வரிசையில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளானவர்கள் அதிகளவில் தமது முடிகளை இழப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கி இரண்டு மாதங்களின் பின்னரே Peggy Goroly என்பவரில் கொரோனா வைரஸ் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இப்படியிருக்கையில் கடந்த ஜுன் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து முடியை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்ததாகவும், கொரோனா அறிகுறி தோன்றி மூன்று மாதங்களிற்கு பின்னரே இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

56 வயதான குறித்த பெண்ணில் சோர்வு, மூளை மந்தமாக செயற்படுதல், இதயத் துடிப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளும் தென்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்