மனிதர்களின் தோலில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும் தெரியுமா?

Report Print Kavitha in நோய்

சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில் கொரோனா வைரஸ் தோலில் மீது எவ்வளவு காலம் உயிரோடு இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆர்மி மெடிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பெக்சியஸ் டிசீஸ் நடத்திய ஆய்வில் கொரோனா வைரஸ் வெப்பநிலையைப் பொறுத்து கொரோனா வைரஸ் தோலில் எட்டு மணி முதல் 14 நாட்கள் வரை உயிருடன் இருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வைரஸ் 37 டிகிரி செல்சியஸில் எட்டு மணி நேரம் தோலில் உயிர்வாழும் என்று கூறியுள்ளது.

22 டிகிரி செல்சியஸில் சுமார் நான்கு நாட்கள் மற்றும் 4 டிகிரி செல்சியஸில் 14 நாட்கள் வரை வாழக்கூடும்.

குறைந்த வெப்பநிலையில் உங்கள் தோலில் வைரஸின் உயிர்வாழும் நேரம் அதிகமாக இருக்கும்.

இதையடுத்து, மருத்துவ தொற்று நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், Sars-CoV-2 என்ற கொரோனா வைரஸ் தோலில் ஒன்பது மணி நேரம் உயிர்வாழ்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர்.

அதே நேரத்தில் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு தோலில் செயலற்றதாகிவிடும்.

அதுவே, 80% எத்தனால் கொண்ட கை சுத்திகரிப்பான் பயன்படுத்தப்படும் போது, SARS-CoV-2 மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இரண்டுமே சுமார் 15 வினாடிகளில் தோலில் செயலிழந்துவிடும்.

எனவே, கொரோனா நோய்த்தொற்றைத் தவிர்க்க கை சுத்திகரிப்பான்களை தொடர்ந்து பயன்படுத்துவது அவசியமாகும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்