ஆதி காலந்தொட்ட இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள். நம் மூதாதையர்களின் ஒவ்வொரு பாரம்பரிய வழக்கத்திலும் ஏதோவொரு அறிவியல் கூற்று இருக்கும்.
என்றைக்கு நாம் நம் முன்னோர்கள் கடைபிடித்த பாரம்பரியத்தை மறந்து, என்று துரித உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டோமே அன்றே நோய்களை விலைகொடுத்து வாங்க தொடங்கிவிட்டோம் என்பதே உண்மை.
கெமிக்கல்கள் நிறைந்த துரித உணவுகள் ஏராளமான நோய்களுக்கு வழிவகுக்கின்றன, இதில் முக்கியமானது தான் புற்றுநோய்.
உணவுகளின் சுவைக்காக பயன்படுத்தப்படும் கலர் பவுடர்கள், ரெடிமேட் உணவுகள் உடலுக்குள் செல்லும் போது சரியாக செரிமானம் ஆகாமல் தங்கிவிடுவதால் புற்றுநோய் ஏற்படுகிறது.
இதன் ஆரம்ப அறிகுறி என்றால் அது மலச்சிக்கல் தான், மலம் கழிக்கும் போது நம் உடலிலிருந்து இறந்த செல்கள் வெளியேற்றப்படுவது வழக்கம்.
ஆனால் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிக்கும் போது இறந்த செல்கள் ரத்தம் ஓட்டம் இல்லாத இடத்தில் தேக்கமடைந்து பெரிய கட்டியாக வளர்ந்து புற்றுநோயாக மாறுகிறது.
குறிப்பாக இக்காலகட்டத்தில் பெண்களில் பெரும்பாலானோர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களில் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் அதிகமாகும் போது மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.
PCOD பிரச்சனை உள்ளவர்களுக்கும், ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பவர்களுக்கும், கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.
குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் குறைந்தது ஒரு வருடம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
அழகு கருதியோ, அலுவலக வேலையை கருத்தில் கொண்டோ தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதாலும் மார்பகத்தில் கட்டிகள் உருவாகி புற்றுநோய் ஏற்படலாம்.
இதேபோன்று மார்பகத்தில் சிலிகான் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு, அந்த இடத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு செல்கள் தேக்கமடைந்து கட்டிகள் உருவாகின்றன.
மார்பக புற்றுநோயை எவ்வாறு தடுப்பது? தொடக்கம் முதலே பெண்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்த விரிவான தகவல்களை வீடியோவில் தெரிந்து கொள்வோம்.