கொரோனா நோயில் இருந்து மீண்டவருக்கு இப்படி ஒரு எதிர்ப்பு ஆற்றலா? மகிழ்ச்சி தரும் தகவல்

Report Print Santhan in நோய்

கொரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்களுக்கு, அந்த நோயிடம் இருந்து 6 மாதங்களுக்கு மேல் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இதுவரை பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் இப்போது ஐரோப்பாவில் இரண்டாம் கட்ட பரவலை துவங்கியுள்ளது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழம் மற்றும் அந்தப் பல்கழகத்தின் பொது மருத்துவமனைகளுக்கான அறக்கட்டளை இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன.

இது குறித்து அந்த ஆய்வில் பங்கேற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியா் டேவிட் ஐரி கூறுகையில், கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவா்களுக்கு, அந்த நோயிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் எதிர்ப்பாற்ற அவா்களது உடலில் குறைந்தது 6 மாதங்களுக்காவது இருப்பது எங்களது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவா்களுக்கு அந்த நோயிடமிருந்து நிரந்தர எதிர்ப்பு சக்தி கிடைப்பதாகத் தெரியாவிட்டாலும், குறுகிய காலத்துக்காவது அந்த நோய் ஒரே நபரை மீண்டும் தாக்காது என்ற இந்தத் தகவல் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

மிக அதிக எண்ணிக்கையிலான மருத்துவப் பணியாளா்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், இந்த விவரம் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்