உலகின் முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கி உள்ளது. இதனை விரைவில் சந்தைப்படுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளது.
இதைப்போல் ஆராய்ச்சியில் சில மருந்துகளும் செயல் திறனை நிரூபித்துள்ளன.
அந்தவகையில் விரைவில் சந்தைக்கு வருவதற்கு தயாராக உள்ள சில நிறுவனங்களின் மருந்துகள் குறித்த பார்ப்போம்.
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா:
இந்த தடுப்பூசியானது, 62 முதல் 90 சதவீதம் வரை நோய்த்தடுப்பு திறன் கொண்டது என்று பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2 டோஸ் கொடுத்து நடத்தப்பட்ட சோதனையில் இந்த முடிவுகள் வந்துள்ளன.

இந்த மருந்தை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து பயன்படுத்த முடியும். எனவே, இந்த மருந்து சந்தைக்கு வரும்பட்சத்தில் கையாள்வது எளிதாக இருக்கும்.
மாடர்னா
மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியின் 2 டோஸ் அளவு கொடுத்து பரிசோதனை செய்ததில், 95 சதவீதம் பலன் தருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மருந்து ஆர்என்ஏ (மரபணு குறியீட்டின் ஒரு பகுதி) தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை மிகவும் உறைநிலையில் வைக்க வேண்டும். அதாவது மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்து பராமரிக்க வேண்டும். உற்பத்தி செய்த 6 மாதங்களுக்குள் மருந்தை பயன்படுத்த வேண்டும்.
பைசர்-பயோன்டெக்
பைசர் பயோன்டெக் நிறுவனமும் ஆர்என்ஏ தொழில்நுட்ப அடிப்படையில் கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கி உள்ளது.
இந்த மருந்தின் செயல்திறன் 95 சதவீதம் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் என்ற உறைநிலையில் வைத்து மருந்தை பாதுகாக்க வேண்டும்.
காமலேயா (ஸ்புட்னிக்-வி)
ரஷ்யாவின் காமலேயா ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி, வைரல் வெக்டர் தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தின் 2 டோஸ் அளவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ததில், 92 சதவீதம் செயல்திறன் கொண்டது தெரியவந்துள்ளது.
இந்த மருந்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து எளிதில் பாதுகாக்க முடியும்.