மூளையைத் தின்னும் அமீபா! எப்படி பரவுகிறது, அறிகுறிகள் என்ன?

Report Print Kavitha in நோய்
532Shares

மனித மூளைக்குள் செல்லக்கூடிய ஒரு கொடிய நுண்ணுயிர் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவிக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

இந்த நுண்ணுயிர் “அமீபா” என்றழைக்கப்படுகின்றது. இது அமெரிக்காவின் தெற்கு பகுதியில் காணப்படுகிறது.

இருப்பினும், இது நாட்டின் வடக்கு பகுதியிலும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

இப்போது இப்படிப்பட்ட கொடிய மூளையைத் தின்னும் அமீபா நோயைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

அமீபா என்றால் என்ன?

அமீபா என்ற பெயர் வந்ததற்கு காரணம், இந்த நுண்ணுயிர் மூளையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டது.

இந்த நுண்ணுயிர் மனித மூளைக்குள் நுழைந்துவிட்டால், அது மூளைத் திசுக்களை அழித்து, மூளையில் அழற்சி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும்.

அமீபா எங்கே காணப்படுகிறது?

இயற்கையாகவே அமீபா வெதுவெதுப்பான நன்னீரில் காணப்படுகிறது. இருப்பினும், காலநிலை மாற்றங்களுடன் வெப்பநிலை அதிகரிக்கும் போது, இந்த அமீபா கண்டத்தின் பிற மாநிலங்களிலும் காணப்படுகிறது.

பொதுவாக இந்த அமீபாவை நீரில் காணலாம் மற்றும் இது 113 டிகிரி பாரன்ஹீட் வரையிலான வெப்பமான வெப்பநிலையை விரும்புகிறது.

அமீபா மூளைக்குள் எவ்வாறு நுழைகிறது?

மூளையைத் தின்னும் அமீபாவால் மூக்கின் வழியாக மூளைக்குள் நுழைய முடியும். ஆனால் இந்த அமீபாவை வாய் வழியாக விழுங்கினால், இது தொற்றை ஏற்படுத்தாது.

அறிகுறிகள் என்ன?

  • கடுமையான முன் தலைவலி
  • காய்ச்சல்
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • கடுமையான கழுத்துப் பிடிப்பு
  • வலிப்புத் தாக்கங்கள்
  • மனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்
  • பிரமைகள் மற்றும் கோமா

அமீபா தொற்றை தடுக்கும் வழிகள் என்ன?

நன்னீர் ஏரிகள் அல்லது குளங்களில் அமீபாக்கள் காணப்படுவதால், ஏரி, குளங்களில் நீச்சல் மற்றும் டைவிங் அடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுமா?

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. நீரின் மூலம் மட்டுமே பரவும்.

ஆனால் இந்த அமீபா மூளையைத் தாக்கிவிட்டால், உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுவும் தொற்று ஏற்பட்ட ஒரு வாரத்திற்குள் உயிரிழந்துவிடுவார்களாம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்