சைவ உணவு மற்றும் புகைப்பிடிப்பவர்களை கொரோனா வைரஸ் தாக்கும் பாதிப்பு குறைவு என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகநாடுகள் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நோயின் பரவலை தடுப்பதற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் யாரை தாக்கும், தாக்காது என்பது குறித்த விவாதம் நடந்தது. அசைவம் சாப்பிடுவர்களை கொரோனா தொற்றிவிடும், சைவ உணவு சாப்பிடுபவர்களை கொரோனா தொற்றாது என்ற கருத்தும் நிலவி வந்தது.
இந்நிலையில் இந்த கருத்துக் கணிப்புக்கு வலுசேர்க்கும் வகையில், ஒரு ஆய்வின் முடிவு வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) பான்-இந்தியா செரோசர்வே என்ற ஆய்வு நடத்தியுளளது.

அந்த ஆய்வில், சைவ உணவு உண்பவர்கள் மற்றும் புகைபிடிப்பவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.
கிட்டத்தட்ட 40 நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது புகைபிடிப்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தனியார் போக்குவரத்து, குறைந்த ஆட்கள் அளவுள்ள தொழில்கள், புகைபிடித்தல், ஏ அல்லது ஓ ரத்த குழு வகையை சேர்ந்தவர்களும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக உள்ளனர் எனவும் ஆய்வு முடிவு தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.