கடவுள் கொடுத்த வரம் Brexit! பிரித்தானியாவை வீழ்த்த அமெரிக்கா சதித்திட்டம்

Report Print Raju Raju in பொருளாதாரம்

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்பின் புதிய வர்த்தக தலைமை செயலாளரும், தொழிலதிபருமான Wilbur Ross விடுத்துள்ள முக்கிய அறிக்கையில், பிரித்தானியா நாடு ஐரோப்பியா யூனியனிலிருந்து விலகிய Brexit ஆல் நமக்கு பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆம், Brexit ஆல் பிரித்தானியா குழப்பத்தில் உள்ளது. இது கடவுள் நமக்கு கொடுத்துள்ள அருமையான வாய்ப்பு.

இதை பயன்படுத்தி பிரித்தானியாவில் உள்ள பல விதமான தொழில்வளங்களை அமெரிக்காவுக்கு கொண்டு வர இது நல்ல தருணமாகும்.

மேலும், பிரித்தானியாவின் தொழில் நகரான லண்டனுக்கு போட்டி நகரான ஜேர்மனியின் Frankfurtம், அயர்லாந்து நாட்டின் Dublin ம் இதை உன்னிப்பாக பார்த்து கொண்டிருக்கின்றன.

அவர்கள் இந்த விடயத்தில் முந்துவதற்குள் நாம் முந்தி கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments