சீனா 2.0 ஆகிறது இந்தியா: சீன பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

Report Print Fathima Fathima in பொருளாதாரம்

இந்தியாவுடனான வர்த்தகப் போட்டிகளை சீனா பொறுப்புடன் அணுக வேண்டும், ஏனெனில் இந்தியாவின் மேலதிக பொருளாதார வளர்ச்சி இந்தியாவை ‘சீனா 2.0’ ஆக்கி விடும் என்று சீன பொருளாதார நிபுணர்கள் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடான சீனா திறம்பட்ட வளர்ச்சி உத்திகளை கடைபிடிப்பது அவசியம், இல்லையெனில் இந்தியா சீனா 2.0-ஆக வளர்வதை வேடிக்கை பார்க்க வேண்டியதுதான் என்கின்றனர் அந்த நிபுணர்கள்.

“இந்திய மக்கள் தொகையின் பாதி 25 வயதினர்தான். இந்த அனுகூலம் சீனாவுக்கு இல்லை. எனவே இந்தியா நிச்சயம் சீனாவின் இடத்தை பொருளாதார ரீதியாக பிடித்து விடும்” என்று இந்தியப் பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்த சீன தனியார் பொருளாதார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.7% மாறாக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% என்று சீனாவின் அரசு நாளிதழ் குளோபல் டைம்ஸ் புள்ளி விவரம் கூறுகிறது, மேலும், “சீனாவில் கடந்த காலத்தில் எப்படி வளர்ச்சி நிகழ்ந்ததோ அதே போல் தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் அதற்கான அடையாளத்தைக் கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளது.

இளம் சமுதாயத்தினரின் பெரிய அளவிலான மக்கள் தொகையுடன் சிறந்த உழைப்புத் திறன் உள்ள நாடாகவும் எதிர்கால வளமுடைய நுகர்வோரும் இந்தியாவில் அதிகமாகி வருகின்றனர். எனவே பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சியை இந்தியா எதிர்நோக்குகிறது. எனவே நாம் இந்தியாவின் வளர்ச்சி குறித்து உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை சீனாவில் மேற்கொள்வதா இந்தியாவில் மேற்கொள்வதா என்று முடிவெடுத்தால் இப்போதைக்கு இந்தியா என்றே அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று சீனாவுக்கு அந்த அறிக்கை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் எர்ன்ஸ்ட் அண்ட் யங் சர்வேயின்படி உலகின் முதலீட்டுக் கவர்ச்சி மிகுந்த இடமாக இந்தியாவே உள்ளது. அதாவது இந்த கருத்துக் கணிப்பில் பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த 500 அதிகாரிகளிடம் கருத்து கேட்ட போது 60% இந்தியாவுக்குச் சாதகமாக பதில் அளித்துள்ளனர்.

ஹூவேய், ஸியோமி, ஓப்போ போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது குறித்து இந்த ஆய்வறிக்கை கூறும்போது, ‘இந்தியா குறிக்கோளுடன் உலக முதலீட்டாளர்கள் முன்னால் ஒரு போட்டிச் சூழலை உருவாக்கினால் நிச்சயம் சீனாவுக்கு இந்தியா சவால் அளிக்கும்” என்று கூறுகிறது.

மேலும், “பொதுவாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி மாதிரியை அப்படியே நகல் செய்யும் சாதக சூழ்நிலைகள் இந்தியாவில் உள்ளது. சீனா போன்றே மக்கள் தொகை, பெரிய சந்தை, பெரிய உழைப்புத்திறன் எனவே இந்தியாவின் மீது ஒரு கண் தேவை” என்கிறது இந்த அறிக்கை.

சூரிய மின்சக்தி உற்பத்தியில் முதலீட்டாளர்களை வரவேற்பதில் இந்தியாவை எந்த நாடும் விஞ்ச முடியாது, சீனா இந்தியாவில் இது குறித்து ஆய்வு செய்யவில்லை, எனவே உடனடியாக சீனா இத்தகைய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த குளோபல் டைம்ஸ் அறிக்கை அறிவுரை வழங்கியுள்ளது.

எனவே உலக மூலதனங்களுக்கு இந்தியா, சீனா 2.0வாக மாறும் என்று சீன நிபுணர்கள் சீனாவுக்கு எச்சரித்துள்ளனர்.

- Thehindu

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments