வரலாறு படைக்கும் இந்தியா: அமெரிக்க வங்கி புகழாரம்

Report Print Peterson Peterson in பொருளாதாரம்

எதிர்வரும் 2028-ம் ஆண்டிற்கு உலகளவில் இந்தியா மூன்றாவது பொருளாதார சக்திமிக்க நாடாக வளர்ச்சி அடையும் என அமெரிக்க வங்கி தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்க வங்கி தலைவரான மெரில் லின்ச் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எதிர்வரும் 2028-ம் ஆண்டிற்குள் இந்தியா மாபெறும் வளர்ச்சி பெற்றிருக்கும் எனவும், சர்வதேச அளவில் மூன்றாவது பொருளாதார சக்தி மிக்க நாடாக திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த சில ஆண்டுகளுக்குள் ஜப்பான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவிகிதத்தினை இந்தியா கடந்து வளர்ச்சி பெற்றிருக்கும்.

இதுமட்டுமில்லாமல், 2019-ம் ஆண்டிற்கு ஜப்பான் நாட்டை பின்னுக்கு தள்ளி உலகின் 5-வது பொருளாதார சக்தி மிக்க நாடாக இந்தியா இருக்கும்.

பிரிக்ஸ் பொருளாதாரத்தின் அடிப்படையில் பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளையும் இந்தியா பின்னுக்கு தள்ளி சீனாவிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும், எதிர்வரும் 2019-ம் ஆண்டிற்குள் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை பின்னுக்கு தள்ளி ஜேர்மனிக்கு அடுத்ததாக பொருளாதார சக்திமிக்க நாடாக இந்தியா திகழும் என மெரில் லின்ச் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்