2020-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Report Print Gokulan Gokulan in பொருளாதாரம்
195Shares

அமெரிக்க பொருளாதார வல்லுநர்களான பால் மில்கிரோம் மற்றும் ராபர்ட் வில்சன் ஆகியோருக்கு 2020-ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

"ஏலக் கோட்பாட்டின் மேம்பாடுகள் மற்றும் புதிய ஏல வடிவங்களின் கண்டுபிடிப்புகளுக்காக" அவர்கள் கவுரவிக்கப்பட்டுள்ளதாகவும், உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு இவர்களின் கண்டுபிடிப்புகள் பயனளித்துள்ளன என நோபல் பரிசுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட இருவருக்கும் 1.1 மில்லியன் டாலர் பரிசு தொகையானது பகிர்ந்தளிக்கப்படும்.

கடந்த ஆண்டு பிரெஞ்சு-அமெரிக்கர் எஸ்தர் டுஃப்லோ, அமெரிக்காவின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி மற்றும் அமெரிக்க மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு, வறுமையை ஒழிக்க முயன்றதற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஒரு பொருளாதார வல்லுநர் பெறக்கூடிய மிக மதிப்புமிக்க பரிசாக இது இருந்தாலும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆல்பிரட் நோபல் தனது விருப்பத்தில் முதலில் தேர்ந்தெடுத்த அதே நிலையை பொருளாதார பரிசு அடையவில்லை. அதற்கு பதிலாக ஸ்வீடிஷ் மத்திய வங்கியின் நன்கொடை மூலம் இது உருவாக்கப்பட்டது இதனால் விமர்சகர்கள் இதை "ஒரு தவறான நோபல்" என்றும் அழைக்கின்றனர்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுவதன் மூலம் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் முழுமையடைகின்றன.

இந்த ஆண்டு நோபல் பரிசை பெற்றவர்களில் பெண்களே அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்