ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீராவோடை ஜும்ஹ பள்ளிவாசலினால் 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு மீராவோடை அமீர் அலி கலாச்சார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
பள்ளிவாசல் தலைவரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளருமான கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயக் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம். அஷ்ரப், கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, மீராவோடை ஜும்ஹ பள்ளிவாசல் நிர்வாக பிரிவிலுள்ள மீராவோடை, செம்மண்ணோடை, மாஞ்சோலை, பதுரியாநகர் போன்ற கிராமங்களை சேர்ந்த 2016ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 27 மாணவர்களும், சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 85 மாணவர்களுமாக 112 மாணவ, மாணவிகள் அதிதிகளால் நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.