க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான லங்காசிறியின் புதிய முயற்சி! கட்டாயம் பாருங்கள்

Report Print Gokulan Gokulan in கல்வி

2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்த காலக்கட்டத்தில் மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகுவதை நாம் அவதானித்தோம்.

கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புக்கள் என மாணவர்கள் பரீட்சையில் சித்திபெற வேண்டும் என்பதற்காக கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றார்கள்.

அந்த வகையில் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் லங்காசிறி ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது.

இம்முயற்சியின் மூலம் படிப்பதற்கு இலகுவான முறையிலும், மனதில் பதியக்கூடிய வகையிலும் ஒவ்வொரு பாடத்தையும் உங்களால் பயின்றுகொள்ள முடியும்.

இதற்காக ஆசிரியர் கலாநிதி சர்மா அவர்கள் உங்களுக்கு வரலாறு பாடத்தின் ஒவ்வொரு அலகுகளையும் இலகுவான முறையில் தொடர்ச்சியாக கற்பிக்க இருக்கின்றார்.

அந்த வகையில் இன்று உங்களுக்கு வரலாற்றுப்பாடத்தில் “கைத்தொழில் புரட்சி” பற்றி தெளிவாக கற்றுத்தருகின்றார்.

அடுத்து வரும் தினங்களில் கணிதம், தமிழ், வரலாறு, விஞ்ஞானம், சமயம் போன்ற பாடங்களையும் சிரேஸ்ட ஆசிரியர்கள் எம்முடன் இணைந்து உங்களுக்காக கற்றுத்தர இருக்கின்றார்கள்.

இதன்மூலம் மாணவர்களாகிய நீங்கள் படித்து பரீட்சையில் சித்திபெற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

ஒவ்வொரு பாடங்களையும் கற்றுக்கொள்வதற்கு தொடர்ந்து எமது செய்தி சேவையுடன் இணைந்திருங்கள்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்