2018 ஆண்டின் முதலாம் தரத்திற்கான மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு

Report Print Kumar in கல்வி
42Shares
42Shares
ibctamil.com

2018 ஆண்டின் தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நடைபெற்றன.

இந்த நிலையில் முதலாம் தரத்திற்கான மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் பாடசாலையின் அதிபர் என்.விமல்ராஜ் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த கல்லூரிக்குக்கு இந்த ஆண்டு முதலாம் தரத்திற்காக 105 மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் விமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதன்போது, மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளதுடன், பாடசாலையின் இரண்டாம் தர மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஆக்கங்களின் கண்காட்சியும் நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த கண்காட்சியை அதிதிகள், பெற்றோர், ஆசிரியர்கள் பார்வையிட்டுள்ளனர். இதில் மாணவர்களின் சிறப்பான கைவண்ணம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

மேலும், நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் அகிலன், மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிவப்பிரகாசம்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்