மலையகத்தில் சாதனை படைத்த ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி

Report Print Thirumal Thirumal in கல்வி

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இதில் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியைச் சேர்ந்த 20 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப்பெற்று மலையகத்தில் சாதனை படைத்துள்ளனர்.

இது தொடர்பில் கல்லூரியின் முதல்வர் ஆர்.ஸ்ரீதர் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது பாடசாலையிலிருந்து இம்முறை பரீட்சைக்கு 191 மாணவர்கள் தோற்றியிருந்தனர், இதில் தமிழ் மொழி மூலம் 25 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 03 மாணவர்களுமாக 28 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் 8 ஏ சித்திகளை 23 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இப்பாடசாலையில் இதுவரை அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்த வருடமாக இது காணப்படுவதாகவும் 2016ஆம் ஆண்டு 14 மாணவர்கள் மாத்திரம் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதாகவும் இம்முறை 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்