க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

Report Print V.T.Sahadevarajah in கல்வி
42Shares
42Shares
ibctamil.com

இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பாடசாலைகள் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை கிளைக்கு அறிவிக்க வேண்டும்.

தனியார் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் இன்றைய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. பாடசாலையை விட்டு விலகி உள்ளவர்கள் மாத்திரமே தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ண்பிக்க முடியும்.

பாடசாலை மாணவராக இருந்து கொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது சட்டவிரோத செயலாகும். இந்த விடயம் தெரியவந்தால், அவர்கள் பரீட்சை தடைக்கு உள்ளாக நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்