தொடர் சாதனை படைக்கும் பட்டிருப்பு மண்டூர் விக்னேஸ்வரா மாணவர்கள்!

Report Print Rusath in கல்வி

மட்டக்களப்பு பட்டிருப்பு மண்டூர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் தொடர்ச்சியாக சித்திரப்பாடத்தில் தொடர் சாதனை படைத்து வருகிறார்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் அமைந்துள்ள மட்.பட்;மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37 பேர் தோற்றி அதில் 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தர உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 வீத சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் சித்திரப்பாடத்தில் 08 மாணவர்கள் ஏ தரச் சித்தியையும், 11 மாவர்கள் பீ தரச் சித்தியையும், 14 மாணவர்கள் சீ தரச் சித்தியையும், 4 மாணவர்கள் எஸ் தரச் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்க வைத்துள்ளனர்.

அந்தவகையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களையும், சித்திரப்பாடத்தைக கற்பித்து வருகின்ற பு.சிறிகாந்த் ஆசிரியரையும் பாராட்டுவதுடன், பாடசாலை அதிபரையும் வாழ்த்துவதாக பட்டிருப்பு கல்வி வலய அழகியல் துறைக்குப் பொறுப்பான உதவிக் கல்விப்பணிப்பாளர் கே.சுந்தரலிங்கம் தெரிவித்தார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...