தனியார் கல்வி நிறுவனங்களுக்கு முன்னால் காத்திருக்கும் மாணவர்கள் தொடர்பில் விசனம்

Report Print Theesan in கல்வி

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியிலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு முன்பாக கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்பாகவே மாணவர்கள் கல்வி நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடுவதும் அங்கிருந்து வீதியால் செல்லும் மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்துவருவது குறித்தும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இம் மாணவர்கள் வீதியிலிருந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றார்கள். தனியார் கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கு ஒரு ஒழுக்கக்கோவை ஒன்றினை அறிமுகப்படுத்தி தனியார் கல்வி நிலையங்களின் நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்பாகவே கல்வி நிலையங்களுக்கு முன்பாக ஒன்றுகூடுவதும் கற்றல் நடவடிக்கைகள் முடிந்த பின்னரும் நீண்ட நேரம் கல்வி நிலையங்களுக்கு முன்பாக ஒன்றிணைந்து வீதியால் செல்லும் ஏனைய மாணவிகளுக்கு தொந்தரவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியூடாக பயணிக்க மாணவிகள் தயக்கம் காட்டிவருகின்றார்கள்.

இவ்வாறு அநாவசியமாக மாணவர்கள் வீதிகளில் ஒன்றுகூடி நின்று அசௌகரியங்களை ஏற்படுத்திவருவதாகவும், இதனால் குறித்த கல்வி நிலையங்களுக்கு மாணவர்களை அனுப்புவதற்கு பெற்றோர்கள் ஆர்வமின்றியுள்ளார்கள்.

எனவே கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் மாணவர்களை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு சரியான நேரத்திற்கு வருவதால் வீண் விபரீதங்களை தடுத்து நிறுத்த முடியும்.

இவ்வாறு இடம்பெறும் சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு கல்வி நிலையங்களின் நிர்வாகிகள் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கல்வி நிலையங்களுக்கு முன்பாக கல்வி நிலையங்களின் ஆசிரியர் ஒருவரை நிறுத்தி மாணவர்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையினையும், முன்னெடுக்குமாறும் பெற்றோர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers