இலங்கையில் திடீரென மூடப்படவுள்ள 37 அரசாங்க பாடசாலைகள்! காரணம் என்ன?

Report Print Ajith Ajith in கல்வி
701Shares
701Shares
ibctamil.com

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக 37 அரசாங்க பாடசாலைகள் ஆகஸ்ட் 23ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 5ஆம் திகதிவரை மூடப்படவுள்ளன.

இதன்படி குறித்த பாடசாலைகள் செப்டம்பர் 6ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகள் 527 மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக 8,432 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 39 பாடசாலைகளில் ஆகஸ்ட் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.

இதற்காக 6,848 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரோயல் கல்லூரி, கொழும்பு - 4 இந்துக்கல்லூரி, மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி, வவுனியா தமிழ் வித்தியாலயம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி உட்பட்ட 31 பாடசாலைகளே க.பொ.த உயர்தர விடைத்தாள் திருத்தப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி, வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி நெல்லியடி மகாவித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரி, கல்முனை ஷாஹிரா கல்லூரி உட்பட்ட 39 பாடசாலைகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறுகின்றன.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்