வவுனியா சரஸ்வதி முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா

Report Print Thileepan Thileepan in கல்வி

வவுனியா சரஸ்வதி முன்பள்ளியின் வருடாந்த கலைவிழாவும், மாணவர் கௌரவிப்பும் பெற்றோர் சங்கத்தலைவர் ரஜனிகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா - மகாறம்பைக்குளம் சரஸ்வதி முன்பள்ளியில் இன்று இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றிருந்தது.

அத்தோடு சிறார்களை கௌரவிக்கும் முகமாக வெற்றிக் கேடயங்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்